கடைசியாக கார்த்திக்கிடம் பேசும் தீபா.. ரம்யா போடும் பிளான்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்யும் போது, காரில் தீபாவுடன் இருக்கும் ரம்யா, எனக்கு வாந்தி வருவதாக சொல்லி காரில் இருந்து இறங்கி, கார்த்திக்கிடம் பேசுகிறாள். அப்போது கார்த்தி, தீபா எதாவது கோவிலை பத்தி சொன்னாங்களா என்று கேட்க, அது பற்றி என்னிடம் அவர் எதுவும் சொல்லவில்லை, எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறாள்.

அம்மா உடல் நிலை சரியாக வேண்டும் என்பதற்கான ஏதோ பரிகாரம் செய்ய போகிறாள் என்று சொன்னதும், எதுவுமே தெரியாதது போல, கார்த்திக், யாரோ தெரியாத சாமியாரை நம்பி தீபா பரிகாரம் செய்யக்கூடாது, அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது, நானும் செங்கல்பட்டு வருகிறேன் என்கிறேன் என்று சொல்ல, சரி வாங்க என்று கார்த்திக் போனை வைக்கிறான். கார்த்திக் தீபாவை தேட ஆரம்பிச்சிட்டான் அவன் இடத்தை கண்டுபிடிப்பதற்குள் தீபாவை கதையை முடித்துவிட வேண்டும் என்று ரம்யா திட்டம் போடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் பரிகாரம் செய்ய தீபாவும், ரம்யாவும் காரில் சென்று கொண்டு இருக்கின்றனர். அப்போது தீபா, ரம்யா நான் இதுவரை கார்த்திக்கிடம் எதையும் மறைத்து இல்ல. இந்த பரிகார விஷயத்தை அவரிடம் சொல்ல வேண்டும். அவருடன் ஒருவாட்டி பேசுகிறேன் என்று சொல்ல, பதறிப்போன ரம்யா, என்ன தீபா பேசுற, கார்த்திக்கை பற்றி உனக்குத் தெரியாத, அவர் நிச்சயமான நீ இந்த பரிகாரத்தை செய்ய ஒத்துக்கவே மாட்டார். அவர் எப்படியாவது உன் மனதை மாற்றிவிடுவார் என்று சொல்கிறாள்.அப்புறம் பரிகாரம் செய்ய முடியாமல் போய்விடும் என்று, அப்புறம் அபிராமி அத்தையை நினைத்துப்பார் என்று சொல்கிறாள்.

குழப்பத்தில் தீபா: இதைக்கேட்டு குழப்பம் அடைந்த தீபா, ஆமாம் ரம்யா நீ சொல்வது உண்மை தான். ஆனால் நான் அவரிடம் பேச வேண்டும் என்று சொல்லி போனை ஆன் செய்து வாட்ஸ் அப்பில் இருந்து வாய்ஸ் நோட் அனுப்புகிறாள். நான் அபிராமி அத்தை குணமாக வேண்டும் என்று பரிகாரம் செய்ய வந்து இருக்கேன். இந்த பரிகாரத்தில் எனக்கு எதாவது ஆன , என்னை நினைத்து வருத்தப்படாதீங்க, நான் செய்யப்போகும் பரிகாரத்தால் அத்தை நிச்சயம் வருவாங்க என்று பேசி அனுப்புகிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக். அம்மாவிற்காக தீபா ஏதோ தப்பான முடிவு எடுத்து இருக்கிறாள் என்று நண்பன் இளையராஜாவிடம் புலம்புகிறான்.

வருத்தப்படும் கார்த்திக்: ஹஸ்பிட்டலில் இருக்கும் போது தீபா பரிகாரத்தை பற்றி ஏதோ சொன்னா, நீங்களும் வாங்க என்று கூப்பிட்டா, நான் அம்மா நிலைமையை நினைச்சு எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்து விட்டேன். இப்போ அவ எங்கே போனா என்றே தெரியவில்லை என புலம்புகிறான். இதைக்கேட்ட இளையராஜா, கார்த்திக் அமைதியான இரு, நிச்சயம் தீபாவை கண்டுபிடித்துவிடலாம் என்று ஆறுதல் கூறுகிறான். இதையடுத்து, கார்த்திக்கின் நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு போன், தீபாவின் போனில் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்து இருக்கு, அது எந்த டவரில் இருந்து வந்தது என்று கண்டுபிடிக்கும்படி கூறுகிறான்.

மறுபக்கம் காரில் இருக்கும் ரம்யா, இவ வேற வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்ட, கார்த்திக் நிச்சயம் இடத்தை கண்டுபிடித்து வருவதற்குள் தீபா கதையை முடித்துவிட வேண்டும் என்று கார் டிரைவரை வேகமாக போக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X