கார்த்திக் எனக்கு வேணும்.. தீபாவை மலையில் இருந்து உருட்டிய ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், இதுவரை கார்த்திக்கிடம் எதையும் மறைத்தது இல்ல. இந்த பரிகார விஷயத்தை அவரிடம் சொல்ல வேண்டும். அவருடன் ஒருவாட்டி பேசுகிறேன் என்று சொல்ல, ரம்யா வேண்டாம், கார்த்திக் உன் மனதை மாற்றவிடுவான் என்கிறார். இதனால், குழப்பம் அடைந்த தீபா, வாட்ஸ் அப்பில் இருந்து பரிகாரம் செய்யப்போவதாக வாய்ஸ் நோட் அனுப்புகிறாள்.

இந்த வாய்ஸ் நோட்டை கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக். அம்மாவிற்காக தீபா ஏதோ தப்பான முடிவு எடுத்து இருக்கிறாள் என்று நண்பன் இளையராஜாவிடம் புலம்புகிறான். ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது தீபா பரிகாரத்தை பற்றி ஏதோ சொன்னா, நீங்களும் வாங்க என்று கூப்பிட்டா, நான் அம்மா நிலைமையை நினைச்சு எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்து விட்டேன் என புலம்புகிறான். இதையடுத்து, போலீசிடம் தீபாவின் போனில் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்து இருக்கு, அது எந்த டவரில் இருந்து வந்தது என்று கண்டுபிடிக்கும்படி கூறுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், பரிகாரம் செய்யும் இடத்திற்கு வரும் ரம்யா, தீபா மற்றும் போலி சாமியார். தீபாவை ஒரு மரப்பெட்டியில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு, மனதில் நினைத்ததை வேண்டிக்கொண்டே இரு அப்போது தான், நீ நினைத்து நடக்கும் என்று சொல்ல, போலி சாமியாரின் பேச்சை நம்பி, தீபா, கடவுளே என் அத்தைக்கு எதுவும் ஆகக்கூடாது, இது கஷ்டமான பரிகாரம் தான், என் அத்தைக்காக இதை நான் செய்து தான் ஆகவேண்டும். இந்த பரிகாரத்தில் எனக்கு எதாவது ஆனால் கூட,என் அத்தை உயிரைக் காப்பாற்றிவிடு என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு மரப்பெட்டிக்குள் அமர்கிறாள்.

செத்துப்போ தீபா: வெளியில் இருக்கும் ரம்யா, ஏய் தீபா இது நான் உன்னை உயிரோடு பார்க்கும் கடைசி நேரம், இதுக்கு அப்புறம் நீ உயிரோடவே இருக்கமாட்ட. உனக்கு துரோகம் செய்வதை நினைச்சா எனக்கு வருத்தமாகத்தான் இருக்கு. ஆனால், நான் கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கணும், அவரோடு சேர்ந்து வாழ வேண்டும். அது நீ உயிரோடு இருந்தால், நடக்காது. நீ செத்தாத்தான் நான் நினைச்ச வாழ்க்கையை வாழ முடியும். இதனால் நான் செய்வது சரிதான் என்று தோன்றுகிறது போய்வா என் அருமை பிரெண்டே என்று மனதிற்குள் இருக்கும் அத்தனை வெறியை, முகத்தில் கொண்டு வந்து, அந்த மரப்பெட்டியின் மூடியை ஆணி வைத்து அடிக்கிறார். இதையடுத்து, அந்த மரப்பெட்டியை கயிற்றால் கட்டி அதை அப்படியே மலையில் இருந்து உருட்டி விடுகிறாள். மரப்பெட்டிக்குள் இருக்கும் தீபா, என்ன நடக்கிறது என்று தெரியாமல் மரப்பெட்டிக்குள் அப்படியும், இப்படியுமாக உருண்டு கொண்டு இருக்கிறாள்.

காப்பாற்றியது எப்படி: மறுபக்கம் தீபாவின் செல்போன் டவர் மூலம் அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட கார்த்திக், அந்த இடத்தை தேடி அலைகிறான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சாமியாரிடம், இந்த அருவி எதாவது இருக்கா என்று கேட்க, ஆமாம் இருக்கு, ஆனால், நீங்க தாண்டி வந்துட்டீங்க, ஒரு கிலோ மீட்டர் பின்னாடி போனா அருவி இருக்கு என்று சொல்கிறார். இதையடுத்து கார்த்திக் அந்த சாமியாரிடம், இந்த இடத்தில் சந்தேகப்படும்படி சாமியார் யாரையாவது பாத்தீங்களா என்று கேட்க, ஆமாம் இரண்டு நாளா இந்த இடத்தில் ஒரு சாமியார் சுற்றிக்கொண்டு இருந்தார் என்று சொல்ல, கார்த்திக் அந்த இடத்தில் இருந்து வேகமாக புறப்படுகிறார்.

ரம்யாவை பார்த்த அதிர்ச்சியில் கார்த்திக்: இதையடுத்து, பரிகாரம் நடக்கும் இடத்தை கண்டுபிடித்துவர, அந்த நேரம் பார்த்து, ரம்யா மரப்பெட்டியின் கயிற்றை விட்டு விட, பெட்டி உருண்டு வர, அதை அப்படியே பிடித்து உள்ளே இருக்கும் தீபாவை கார்த்திக் காப்பாற்றி விடுகிறான். இதையடுத்து மலை உச்சியில் ரம்யாவும் சாமியாரும் இருப்பதை பார்த்த கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X