கார்த்திக்கு எதிராக நடக்கும் சதி.. காதலை சொல்ல வந்த ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி ரேவதியை சந்தித்து அபிராமியின் தாலியை கொடுத்து, இது உனக்கு சேர வேண்டியது, அபிராமியோட தாலி, இதை நீ பத்திரமாக வைத்துக்கொள் என்கிறாள். ரேவதியும் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்கிறாள். அதன் பிறகு ரேவதியின் மனசாட்சி அவள் முன் தோன்றி, கார்த்தியிடம் காதலை சொல் என்று சொல்ல ரேவதி தனது காதலை சொல்ல முடிவெடுக்கிறாள்.
இதையடுத்து, கார்த்திக்கின் அண்ணன் போன் செய்து, அம்மாவின் சொத்தை பிரிக்க வேண்டி இருக்கிறது. இதனால், நீ வந்து கையெழுத்துப்போட வேண்டும் என்று சொல்கிறான். உடனே சரி நான் நாளைக்கு சென்னைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்கிறான். இதை, சந்திரகலா மறைந்து இருந்த கேட்டு விட்டு, கார்த்திகை சிக்க வைக்க, அடுத்து ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும் இதை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள்
கார்த்திகை தீபம்: எப்படி சென்னை செல்வது என்று யோசித்த கார்த்திக், நண்பன் இளையராஜாவை அழைத்து பாடுவதற்காக ஒருவரை ஏற்பாடு செய்ய சொல்கிறான். பின் கார்த்திக் சுவாதியிடம் நீ அந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், நாளைக்கு கிளம்ப வேண்டும் என்கிறான். அதை கேட்ட ரேவதி நானும் வருகிறேன் என்கிறாள். நீ எதற்கு தேவை இல்லாமல் நானும், சுவாதியும் மட்டும் போய் வருகிறோம் என்று சொல்ல, ரேவதி வருத்தப்படுகிறாள். இந்த வீட்டில் எப்போதும் ஆட்கள் இருக்கிறார்கள், சென்னையில் சுவாதி பாட சென்ற நேரத்தில் காதலை சொல்லிவிட வேண்டும் என திட்டம் போடும் ரேவதி, கார்த்திக்கிடம் அடம்பிடித்து நானும் வருகிறேன் என்று சொல்ல, கார்த்தியும் சரி வா என சொல்கிறான்.

அடுத்த பிளான்: இதையடுத்து, சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் கார்த்தி ரேவதி மற்றும் சுவாதி ஆகியோர் கிளம்பி வர சந்திரகலா இவர்களை தடுத்து நிறுத்துகிறாள். எங்க போறீங்க என்று கேட்க சென்னை போவதாக சொல்கின்றனர். சுவாதியும் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்று சொன்னதால் கூட்டிட்டு போறோம் என்று சமாளிக்கின்றனர். மூவரும் சென்னைக்கு வர மறுபக்கம் சந்திரகலா, சிவனாண்டியை சந்தித்து இவர்கள் சென்னை சென்றுள்ள விஷயத்தை சொல்கிறாள். சிவனாண்டி அவ்வளவுதானே நான் பார்த்துக்கிறேன் என்று சதி திட்டத்திற்கு தயாராகிறான்.
என்ன நடக்கும்: சென்னை வந்து சேரும் இவர்கள் நேராக ஒரு ஹோட்டலுக்கு வருகின்றனர். கார்த்திக் தனக்கு ரூம் மற்றும் ரேவதி, சுவாதிக்கு ஒரு ரூம் என தனித்தனியாக ரூம் புக் செய்கிறான். அப்போது கிருஷ்ணன் என்பவர் ஆடிஷன் நடத்துபவருக்கு போன் செய்து என் பொண்ணு தான் செலக்ட் ஆகணும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு கார்த்திக் பயப்படாதே திறமைக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று சுவாதிக்கு ஆறுதல் கூறுகிறான். பிறகு ரேவதி கார்த்தி இடம் தனது காதலில் சொல்ல அவனது ரூமுக்கு வர கார்த்திக் தன்னுடைய பிரண்ட்டோட குழந்தையோட பர்த்டே பங்க்ஷன் இருப்பதாக பொய் சொல்லி ரெஜிஸ்டர் ஆபீஸ் கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











