அபிராமியின் சாவிற்கு காரணமான சந்திரகலா.. சபதம் போட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலா அபிராமியின் இறுதி சடங்கில் கொல்லி வைக்க அவளது மகன் கார்த்திக் நிச்சயம் வருவான். அவன் தான் நம்ம டிரைவரர் ராஜா என்பதை நான் இன்று நிரூபிக்கிறேன். என்னுடன் வா என, சந்திரகலா சாமுண்டீஸ்வரியை இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருகிறாள். அதே நேரம், இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு வரும் ரேவதி, அபிராமிக்கு கார்த்திக் கொல்லி வைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வந்து, அவர் மறைத்து வைத்திருந்த போட்டோவை எடுத்து பார்க்க, அதில் அபிராமி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
தகனம் நடைபெறும் இடத்திற்கு சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை அழைத்து வந்து, பாருக்கா, நம்ம வீட்டில் வேலை செய்யும் டிரைவர் கார்த்திக் தான், பரமேஸ்வரி பாட்டியோட பேரன், அவன் தான் கொல்லி வைக்கிறான் என்று சொல்கிறாள். இதை கேட்டு கடுப்பான சாமுண்டீஸ்வரி உனக்கு அறிவு இருக்கா இல்லையாடி.. அந்த இடத்தில் ராஜா மட்டும் இல்லை என்னோட மூத்த மாப்பிள்ளை மயில்வாகனமும் இருக்காரு, என்னுடைய புருஷனும் இருக்காரு இப்ப கூட உனக்கு அறிவு இல்ல. உன்னுடைய பேச்சை கேட்டு நான் வந்தேன் பாரு, எல்லாம் என்னுடைய தப்புதான் இதுக்கு மேல ராஜாவை பத்தி ஏதாவது சொன்னே அவ்வளவுதான் என திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள்.

கார்த்திகை தீபம்: அதன் பிறகு ரேவதி பரமேஸ்வரி பாட்டியை பார்த்து உண்மையை சொல்லுங்க ராஜா தான் உங்க பேரனா என்று கேட்க, பரமேஸ்வரி பாட்டி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள். எல்லாம் எனக்கு தெரியும் என் தலையில் சத்தியம் செய்து சொல்லுங்கள் என்று சொல்ல, பரமேஸ்வரி வேறு வழியில்லாமல் உண்மையை சொல்கிறாள். மேலும், கார்த்திக் இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைப்பேன் என சத்தியம் செய்து விட்டுத்தான் அந்த வீட்டுக்கு வந்தான். கடைசியில் இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி பாட்டி கண் கலங்குகிறாள். இதனால் ரேவதி கார்த்திக் நல்லவன் தான், இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம், அம்மாவின் பிடிவாதம் தான், அவங்களால் இப்படி ஒரு உயிர் போய்விட்டதே என நினைத்து வருத்தப்படுகிறாள்.
கண்கலங்கிய கார்த்திக்: மறுபக்கம் வருத்தத்தில் இருக்கும் கார்த்திக், இந்த இரண்டு குடும்பமும் ஒன்றாக சேர வேண்டும், சந்தோஷமா இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள் கடைசில் இப்படி ஆகிவிட்டது. இதற்கு மேல் அந்த வீட்டில் எனக்கு என்ன வேலை இருக்கு, என் அம்மா சாவிற்கு காரணமானவர்களை ஒழித்துகட்டிவிட்டு நானும் எங்காவது போய்விடுகிறேன் என்ற சொல்கிறான். இதைக்கேட்ட ராஜராஜன், என்ன கார்த்திக் பேசுற, உன் அம்மாவின் ஆசை இரண்டு குடும்பமும் ஒன்றாக சேரவேண்டும் என்று, அதற்காகத்தான் இப்படி விஷயமேன நடந்தது. தயவு செய்து கோவப்படாமல் அமைதியாக இரு என்கிறார்.
அதைத்தொடர்ந்து வில்லன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூடிய விரைவில் ராஜா சேதுபதியின் பேரன் கார்த்தி தான் என்ற உண்மையை உடைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











