சாமுண்டீஸ்வரியை பழி தீர்த்த முத்துவேல்.. சுவாதிக்கு நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் முத்துவேல் சிவனான்டியும் சேர்ந்து சாமுண்டீஸ்வரியின் மகள் சுவாதியை சந்தித்து ஒரு ஹோட்டலில் மியூசிக் டைரக்டர் இன்டெர்வியூ ஏற்பாடு பண்ணி இருக்காரு, நீ போய் அட்டென்ட் பண்ணி பாரு என்று சொல்கிறான். இங்கே ஒரு இன்டெர்வியூ நடப்பது போல் செட்டப் செய்து வைக்கின்றனர். ஸ்வாதி வந்ததும் அவளுக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிடு, நான் அவளை பிராத்தல் கேஸில் சிக்க வைத்து விடுகிறேன் என திட்டம் போடுகிறான். ஹோட்டலுக்கு வந்த ஸ்வாதி க்கு ஜூஸ் கொடுக்க அதை குடித்த ஸ்வாதி மயங்கி விழுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
ஜூஸ் குடித்த ஸ்வாதி மயங்கி விழ மியூசிக் டைரக்டர் முத்துவேலுக்கு தகவல் கொடுக்க அவன் போலீசுக்கு ஃபோன் செய்து ஹோட்டலில் இந்த ரூம் நம்பரில் பிராத்தல் நடப்பதாக சொல்கிறான். அடுத்து கார்த்திக் ஸ்வாதி நேத்து வைத்து இருந்த விசிட்டிங் கார்ட்ல இருந்த முகவரிக்கு சென்று விசாரிக்கிறான். ஆனால், அந்த பெயரில் யாரும் இல்லை என்று தெரியவருகிறது. இதையடுத்து, கார்த்திக் தனது போலீஸ் நண்பருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, அவர், ஒரு அதிகாரிக்கு ஃபோன் செய்து எங்கே இருக்கீங்க என்று கேட்க, அந்த அதிகாரி, ஒரு ஓட்டலில் பிராத்தல் நடப்பதாக தகவல் வந்து இருக்கு, அதைவிசாரிப்பதற்கான அங்கே போகிறோம் என்று சொல்கிறான். இதைகேட்டுக்கொண்ட சரவணன், கார்த்திக்கிடம் அந்த ஓட்டலின் பெயரை சொல்கிறார். ஹோட்டலுக்கு கார்த்திக் ஒரு பக்கம் போலீஸ், ஒரு பக்கம் என வந்து விட கார்த்திக் ஒரு வழியாக தேடி ஸ்வாதி இருக்கும் ரூமை கண்டு பிடித்து அங்கிருந்தவர்களை அடித்து துவைத்து ஸ்வாதியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

கார்த்திகை தீபம்: வீட்டில் அனைவரும் இருக்க இந்த நிலைமையில் ஸ்வாதியை அனைவரும் பார்த்தால் பிரச்சனையாகிவிடும் என்று, எப்படி வீட்டிற்குள் அழைத்து செல்ல முடியும் என யோசித்து ரேவதிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் ரூமில் இருந்து கை வலிப்பதாக சத்தம் போட்டு அழுகிறாள். இதனால், எல்லாரும் ரூம்க்கு செல்கின்றனர். இந்த கேப்பில் கார்த்திக் ஸ்வாதியை ரூமுக்கு அழைத்து சென்று விடுகிறான். அடுத்து ஸ்வாதி கண் விழிக்க கார்த்திக், ரேவதி எதுக்கு ஹோட்டலுக்கு போன? யாரு உன்னை போக சொன்னது என்று விசாரிக்க அவள் ஒரு பொண்ணு தான் சொன்னதாக சொல்கிறாள். கார்த்திக் அந்த பொண்ணுக்கு ஃபோன் போட்டு மிரட்ட எல்லாம் முத்துவேலின் சதி என்று தெரிய வருகிறது. இதனால் ஆவேசமாகும் கார்த்திக் நேராக முத்துவேலை சந்தித்து சிவனாண்டி கண் முன்னே அவனது கழுத்தை பிடித்து அலேக்காக தூக்கி ஒரு பொண்ணோட வாழ்க்கையில் இப்படியா விளையாடுவீங்க என்று எச்சரிக்கிறான்.
அடுத்து தனது அம்மா சிவகாமிக்கு இறந்த தினம் வருவதால் அந்த நாளில் புடவை வைத்து பூஜை செய்து அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்பதால் சாமுண்டீஸ்வரி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சந்திரகலாவிற்கு உத்தரவு போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











