பிரிந்த உறவுகளை சேர்க்க போராடும் கார்த்திக்..கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அருணாச்சலத்துக்கு 60 வயசு ஆவதால், அபிராமியின் கல்யாண நாளை பெருசாக கொண்டாட திட்டம் போடுகிறாள். ஆனால் அபிராமி வீடு இப்போ இருக்கும் நிலைமையில இதுதேவையா வேண்டாம் என்கிறாள். மீனாட்சி வெளியே இருக்கா, ஐஸ்வர்யா இந்த வீட்ல இல்ல அப்படி இருக்கும்போது நீயும் தீபாவும் மட்டும் தான் ஜோடியாக இருந்து ஆசீர்வாதம் வாங்குவீங்க. பிள்ளைங்கள் எல்லாம் இப்படி பிரிந்து இருக்கும் போது இது தேவையா என சொல்லி வருத்தப்படுகிறாள்.

பிறகு கார்த்திக் நானும் தீபாவும் ஜோடியாக காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குற மாதிரி அருண் ஐஸ்வர்யாவும், ஆனந்த் மீனாட்சியும் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்குவாங்க என்று வாக்கு கொடுக்க அபிராமி நீ என்னமோ சொல்ற நான் இதை ஃபங்ஷன் வேண்டாம் என்று சொல்லலாம்னு தான் இருந்தேன் ஆனா இப்போ நீ சொல்லவே நடக்கிறது நடக்கட்டும் என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

நாடகமாடும் ஐஸ்வர்யா: கார்த்திகை தீபம் இன்றை எபிசோடில், கார்த்திக் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறான். ஐஸ்வர்யாவும் அபிராமியின் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள் நான் இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று நாடகம் ஆடி வீட்டிற்குள் வந்து விடுகிறாள். இதையடுத்து, ஆனந்திடம் பேசும் கார்த்திக், அண்ணி மீனாட்சியை வீட்டு அழைக்கும்படி கூற, ஆனந்த், தனது முடிவில் பிடிவாதமாக இருந்து ரியா தான் என் மனைவி என்கிறார். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கார்த்திக் யோசித்துக்கொண்டு இருக்கிறார்.

ரம்யா மீது வரும் சந்தேகம்: மறுபக்கம் அபிராமியின் 60வது திருமண நாளுக்கு தீபா, ரம்யாவை அழைக்கிறாள். அந்த வீட்டிலும், கார்த்திக் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும் என்றால், தீபாவை கொல்வது தான் சரி என்று நினைக்கும் ரம்யா எப்படியாவது தீபாவை கொல்ல திட்டம் போடுகிறாள். அதே நேரம் கார்த்திக்கிற்கு தீபாவின் தோழி அம்மு மீது சந்தேகம் வர, தோழியை பார்க்க வேண்டும் என்று வீட்டுக்கு அழைக்க, அவள் கார்த்திக் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து சென்றுவிடுகிறாள். இதனால், கார்த்திக்கிற்கு ரம்யா மீது சந்தேகம் வர, பேக்டரிக்கு போன் செய்து, ரம்யா அங்கு நான் இருக்கிறாளா என்று வேவு பார்க்கிறார். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X