கார்த்திக்கால் தவிக்கும் ரம்யா..கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அருணாச்சலத்துக்கு 60 வயதாவதால், அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடு நடைபெறுகிறது. குடும்பத்திற்குள் இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது இது தேவையா வேண்டாம் என்கிறாள் அபிராமி. பிள்ளைங்கள் எல்லாம் தனித்தனியாக இப்படி பிரிந்து இருக்கும் போது இது தேவையா என சொல்லி வருத்தப்படுகிறாள். ஆனால், கார்த்திக் அனைவரையும் சமாதானப்படுத்தி அழைத்து வருவது என் வேலை வருகிறான்.

இதையடுத்து, ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறான். ஐஸ்வர்யாவும் அபிராமியின் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள் நான் இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று நாடகம் ஆடி வீட்டிற்குள் வந்து விடுகிறாள். இதையடுத்து, ஆனந்திடம் பேசும் கார்த்திக், அண்ணி மீனாட்சியை வீட்டு அழைக்கும்படி கூறுகிறான், ஆனால் ஆனந்த், தனது முடிவில் தெளிவாக இருக்க என்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் ரம்யாவின் மனசாட்சி தோன்றி நீ இந்த ஃபங்ஷனுக்கு போகலைனா அம்மு, ரம்யா ரெண்டு பேரும் ஒருத்தர் தான் என்ற உண்மை கார்த்திக்கிற்கு தெரிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்க தீபா போன் செய்து நாளைக்கு கல்யாண நாள் கண்டிப்பா வரணும் என்று கூப்பிடுகிறாள். மேலும் நீ வரலைனா நானும் கார்த்திக்கும் சேர்ந்து வந்து உன்னை கூட்டிட்டு வருவோம் என்று சொல்ல ரம்யா வருவதாக வாக்கு கொடுக்கிறாள்.

வருத்தப்படும் அபிராமி: இதையடுத்து தீபா மீனாட்சி கழட்டி வைத்த தாலியை எடுத்து கார்த்திக்கிடம் கோவிலுக்கு சென்று தாலியை வைத்து பிரார்த்தனை செய்யப் போவதாக சொல்லி கிளம்பி வருகிறாள். மறுபக்கம் அபிராமி வருத்தமாக உட்கார்ந்து இருக்க அருணாச்சலம் என்னாச்சு என்று கேட்க ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துட்டா ஆனா மீனாட்சி இந்த வீட்டில் இருந்தாலும், ஆனந்தோட சேர்ந்து வாழாமல் இருக்கா, பங்ஷன்ல இந்த விஷயம் தெரிஞ்சா எல்லாரும் என்ன சொல்லுவாங்க என்று புலம்ப அருணாச்சலம் கார்த்திக் இருக்கான்ல அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான் என்று ஆறுதல் கூறுகிறார்.

எல்லாம் நல்ல படியாக நடக்கணும்: இதைத் தொடர்ந்து தீபா கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு கற்பூர ஆரத்தி தொட்டு கும்பிடும் போது கற்பூரம் அணைந்து விட அபசகுணமாக தெரிவதாக பதறுகிறாள். உடனே கார்த்திக் காற்றில் அணைந்திருக்கும் என்று சொல்லி ஆறுதல் சொல்கிறான். தீபா நகர்ந்து வந்ததும் கடவுளிடம் தீபா சமாதானம் செய்யத்தான் அப்படி சொன்னேன் பங்க்ஷன்ல எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என வேண்டிக் கொள்கிறான். அடுத்ததாக ஒரு பெரிய மண்டபத்தில் 60-ம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்திருக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத் தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X