ரியாவை விரட்ட கார்த்திக் போட்ட பிளான்.. ரம்யா தப்பிப்பது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா, மீனாட்சி கழட்டி வைத்த தாலியை எடுத்துக்கொண்டு கார்த்திக்குடன் கோவிலுக்கு சென்று தாலியை வைத்து பிரார்த்தனை செய்யப் போவதாக சொல்லி கிளம்பி வருகிறாள். மறுபக்கம் அபிராமி வருத்தமாக உட்கார்ந்து இருக்க அருணாச்சலம் என்னாச்சு என்று கேட்க ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துட்டா ஆனா மீனாட்சி இந்த வீட்டில் இருந்தாலும், ஆனந்தோட சேர்ந்து வாழாமல் இருக்கா, பங்ஷன்ல இந்த விஷயம் தெரிஞ்சா எல்லாரும் என்ன சொல்லுவாங்க என்று புலம்ப, கார்த்திக் இருக்கான் அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான் என்று ஆறுதல் கூறுகிறார் அருணாச்சலம் .

இதைத் தொடர்ந்து தீபா கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு கற்பூர ஆரத்தி தொட்டு கும்பிடும் போது கற்பூரம் அணைந்து விட அபசகுணமாக தெரிவதாக பதறுகிறாள். உடனே கார்த்தி காற்றில் அணைந்திருக்கும் என்று சொல்லி ஆறுதல் சொல்கிறான். தீபா நகர்ந்து வந்ததும் கடவுளிடம் தீபா சமாதானம் செய்யத்தான் அப்படி சொன்னேன் பங்க்ஷன்ல எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என வேண்டிக் கொள்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரியாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்றும், ரியாவின் உண்மையான முகம் தெரிந்தால் தான் ஆனந்த், மீனாட்சி உடன் சேர்ந்து வாழ்வான் என்று திட்டம் போட்டு, ரியாவின் முன்னாள் கணவர் மதுவை திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கிறான். மேலும், நீ ரியாவிடம் சென்று, அவளை வம்பு இழுப்பது போல பேசு, ரியா நிச்சயம் சும்மா இருக்க மாட்டாள் என்று, மதுவை வைத்து திட்டம் போடுகிறாள்.

குழப்பத்தில் ரம்யா: இதையடுத்து தீபா, மீண்டும் ரம்யாவுக்கு போன் செய்து எங்க இருக்க? என்று விசாரிக்க வீட்டில் இருக்கும் அவள் போகலைனா கார்த்திக் கிட்ட மாட்டிப்போம் என்று யோசித்து காரில் வந்துட்டு இருக்கேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறாள். கார்த்திக்கிற்கு ஏற்கனவே நம்ம மேல சந்தேகம் வந்துவிடும் என்று யோசிக்கிறாள், கார்த்திக்கை அந்த இடத்தில் இருந்து எப்படி வெளியே அனுப்புவது என்று திட்டம் போடுகிறாள்.

திருமணத்திற்கு ரெடியாகும் அபிராமி: மறுபக்கம், வீட்டில் தீபா, மீனாட்சி ஆகியோர் அபிராமியை அலங்காரம் செய்ய ரெடியாகின்றனர், அபிராமியை பார்த்து யங்காக இருப்பதாக கலாய்க்கின்றனர், கூடவே மாமாவுக்கு தான் கொஞ்சம் வயசான மாதிரி இருக்கும் என்று கலாய்க்கின்றனர், ரியா நான் ஆனந்த்துடன் சேர்ந்து அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என்று சவால் விட்டு இருக்கேன், அதனால் இந்த இடத்தை விட்டு போக கூடாது என்று உறுதியாக இருக்கிறாள். பிறகு அபிராமிக்கு மேக்கப் போட ஒரு பியூட்டிஷியன் வர கார்த்திக் என் அம்மாவுக்கு நானே என் கையால் மேக்கப் போட்டு விடுறேன் என்று சொல்லி அவனே அபிராமிக்கு மேக்கப் போட்டு விடுகிறான்.

என் சாவுக்கு நீ தான் காரணம்: இதையடுத்து ரியாவிற்கு போன் செய்யும் மது, உன்னால என் வாழ்க்கையே போச்சு, உன்ன சும்மா விடமாட்டேன். தற்கொலை பண்ணிக்க போறேன், என் சாவுக்கு நீ தான் காரணம் என்று எழுதிவைப்பேன் என்று சொல்ல ரியா பதற்றம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X