கர்ப்பத்தை மறைக்கும் ரோகினி.. துர்காவை குறிவைக்கும் சிவனாண்டி.. கார்த்திகை தீபம்!
சென்னை: ஜானகி மற்றும் மைதிலியை ரேவதி கோவிலில் பார்த்து பேச, இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் ஏற்படுகிறது. இதையடுத்து, ரேவதி இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு வேலை போட்டு கொடுக்க சொல்ல சாமுண்டீஸ்வரி மாப்பிள்ளை ராஜாவிடம் சொல்லு என்று சொல்கிறாள். அப்போது, சந்திரகலா, அது உன்னுடைய கம்பேனி அதில் வேலை செய்ய வேண்டும் என்றாலும், மாப்பிள்ளைய கேட்க வேண்டுமா என கேட்க. ஆமாம், மாப்பிள்ளை தான் இப்போ கம்பேனிகளை பார்த்துக்கொள்கிறார். இதனால், அவரிம் ஒரு வார்த்தை கேட்பது தான் சரி என்கிறாள் சாமுண்டீஸ்வரி. இதையடுத்து, கார்த்திக்காக இருவரும் காத்திருக்க, கடைசியில் அவன் வர நேரமாகுவதால் இருவரும் வீட்டிற்கு வந்துவிடுகின்றனர்.
அதன் பிறகு எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ரோகினி வாந்தி எடுக்கிறாள். அன்று இரவே சாமுண்டீஸ்வரி கனவில் அவளது அம்மா வர அவள் ஜோசியரை சந்திக்கிறாள், உங்க மூத்த பொண்ணுக்கு உங்க அம்மா வந்து பொறக்க போறாங்க, பிரிந்த குடும்பம் ஒன்னு சேர போவதாக சொல்ல சாமுண்டீஸ்வரி அதுக்கு வாய்ப்பே இல்ல என்று அதிர்ச்சி அடைகிறாள். அதே போல் ரோஹிணியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்திருக்க அவள் கர்ப்பம் என தெரிய வருகிறது. இதையடுத்து, இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரோகினி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வீட்டுக்கு சொல்ல சந்தோசமாக வீட்டிற்கு வர, சாமுண்டீஸ்வரி நான் இப்போது தான் ஒரு ஜோசியரை பார்த்தேன், அவர் இந்த வீட்டில் பிறக்கும் குழந்தை தான், பிரிந்து போன குடும்பத்தை ஒன்னா சேர்க்கும் என்று சொல்லி இருக்கிறார். நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் அந்த குடும்பத்தோடு சேர மாட்டேன். இதனால், நீ குழந்தை எல்லாம் பெத்துக்காத என்று சொல்ல ரோகினி மற்றும் மயில்வாகனம் அதிர்ச்சி அடைகின்றனர். சாமுண்டீஸ்வரி இப்படி சொல்லிவிட்டதால், ரோகிணி கர்ப்பம் குறித்து சொல்லாமல் மறைக்கின்றனர். இதையடுத்து ரூமில் கார்த்திக், ரேவதி, மயில்வாகனம் ஆகியோர் இருக்க ரோகினி கர்ப்பம் என்ற விஷயத்தை எப்படி சொல்லாமல் இருப்பது என கலங்குகிறாள், அதே நேரத்தில் மயில்வாகனம், ரோகினி ஆகியோர் இந்த குழந்தை வேண்டும் எனவும் சொல்கின்றனர்.
துர்காவிற்கு கல்யாணம்: இதைத்தொடர்ந்து, சாமுண்டீஸ்வரியின் வீட்டுக்கு வரும் ஒரு குடும்பம், துர்காவை பெண் கேட்கின்றனர், உங்களுடைய கண்டிஷன் எல்லாத்துக்கும் சம்மதம் என்று சொல்ல சந்திரகலா எனக்கு என்னமோ இந்த சம்மந்தம் சரியா வரும்னு தோணுது என்று சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள். துர்கா சாமுண்டீஸ்வரியை தனியாக அழைத்து இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி உனக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று சொல்லி விடுகிறாள். இந்த சம்மந்தத்துக்கும் சம்மதம் சொல்கிறாள். அதன் பிறகு தான் இது சிவனாண்டி, முத்துவேல் பிளான் என தெரிய வருகிறது.
அடுத்து துர்கா நவீனுக்கு தகவல் சொல்ல அவன் நாளைக்கு கோவிலில் உனக்காக காத்திருப்பேன். நீ வந்தா நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறான். அடுத்த நாள் சாமுண்டீஸ்வரி துர்காவிடம் ஒரு புடவையை கொடுத்து நிச்சயத்துக்கு தயாராக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











