விபூதி அடிக்க பார்த்த ரம்யா.. தெறித்து ஓட விட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா, மீனாட்சி ஆகியோர் அபிராமியை அலங்காரம் செய்ய ரெடியாகின்றனர், அபிராமியை பார்த்து யங்காக இருப்பதாக கலாய்க்கின்றனர், கூடவே மாமாவுக்கு தான் கொஞ்சம் வயசான மாதிரி இருக்கும் என்று கலாய்க்கின்றனர், ரியா நான் ஆனந்தத்துடன் சேர்ந்து அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என்று சவால் விட்டு இருக்கேன், அதனால் இந்த இடத்தை விட்டு போக கூடாது என்று உறுதியாக இருக்கிறாள் ரியா.
அப்போது, தீபா, ரம்யாவுக்கு போன் செய்து எங்க இருக்க? என்று விசாரிக்க வீட்டில் இருக்கும் அவள் போகலனா கார்த்திக் கிட்ட மாடிப்போம் என்று யோசித்து காரில் வந்திட்டு இருக்கேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறாள். கார்த்திக்கு ஏற்கனவே நம்ம மேல சந்தேகப்படுகிறார்.இப்போ போகலா சந்தேகம் அதிகமாகிவிடும் என்று யோசிக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஆள்மாறாட்டம் செய்யும் ரம்யா: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அபிராமிக்கு அறுபதாம் கல்யாணம் தடபுடலாக நடந்து முடிக்க, கார்த்திக் தீபா ஜோடியாக சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க அதே போல் அபிராமி அருணாச்சலம் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் ரம்யா காரில் இருந்து இறங்கி நடந்து வர அதே ஸ்டைலில் அதே மாதிரியான உடையில், இன்னொரு பெண் கூடவே நடந்து வருகிறாள். ரம்யா அவளிடம் நீ கார்த்தியிடம் போய் நான் தான் அம்முனு என்று சொல்லி அறிமுகமாகு என்று சொல்லி அனுப்புகிறாள். எக்காரணத்தை கொண்டும் மாட்டிக்காத என்றும் எச்சரித்து அனுப்புகிறாள் ரம்யா.
வசமாக சிக்கினார்: பிறகு உள்ளே வரும் ரம்யா, தீபாவை சந்தித்து நான் சொன்ன மாதிரியே வந்துட்டேன் பார்த்தியா என்று பேசிக் கொண்டிருக்க, மறுபக்கம் அம்முவாக நடிக்க வந்த பெண் கார்த்தியிடம் சென்று நான்தான் அம்மு என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். அவளது கையில் டாட்டூ இல்லாததை பார்க்கும் கார்த்திக்,வந்து இருப்பது அம்மு இல்லை என்பதை கார்த்திக் புரிந்து கொள்கிறான். இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்ளும் கார்த்திக், வாங்க தீபாவை போய் பாத்துட்டு வரலாம் என்று சொல்ல அந்த பெண் அதிர்ச்சி அடைகிறாள்.
அடுத்து நடப்பது என்ன: நான் அம்மு கிடையாது, தீபாவோட ஃப்ரெண்டும் நான் கிடையாது. மண்டபம் மாறி வந்துட்டேன் என்று சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறாள். இதை தூரத்தில் இருந்து கவனித்த ரம்யாவும் தீபாவுக்கு தெரியாமல் எஸ்கேப் ஆகிவிட தீபா அம்முவை தேடி அவளுக்கு போன் செய்ய ரம்யா போனை எடுக்காமல் இருக்கிறாள்.
வசமாக சிக்கிய ரியா: மறுபக்கம் கார்த்திக் போட்ட திட்டப்படி ரியாவின் முன்னாள் கணவர் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்ட, மதுவை சந்திக்க போகிறாள் அப்போது, அவர் ரியாவிடம் என்னைத்தான் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு கழட்டிவிட்ட, ஆனந்திடமாவது உண்மையான காதல் இருக்கா என்று கேட்க, கடுப்பான ரியா எனக்கு யார் மீதும் காதல் இல்ல, ஆனந்திடம் இருக்கும் பணத்திற்காகத்தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பணம் தான் எனக்கு முக்கியம் என்கிறார். ரியா பேசுவதை அப்படியே ரெக்கார்டு செய்து மது, கார்த்திக்கிற்கு அனுப்பி விடுகிறான். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











