கடத்தப்பட்ட மீனாட்சி.. அம்மு தான் ரம்யா உடைந்தது உண்மை.. கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அறுபதாம் கல்யாணத்திற்கு வரும் ரம்யா, காரில் இருந்து இறங்கி நடந்து வர அதே ஸ்டைலில் அதே புடவையில், இன்னொரு பெண் கூடவே நடந்து வருகிறாள். ரம்யா அவளிடம் நீ கார்த்திக்கிடம் போய் நான் தான் அம்மு என்று சொல்லி அறிமுகமாகு என்று சொல்லி அனுப்புகிறாள். அம்முவாக நடிக்க வந்த பெண் கார்த்திக்கிடம் சென்று நான்தான் அம்மு என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். அவளது கையில் டாட்டூ இல்லாததை பார்க்கும் கார்த்திக், வந்திருப்பது அம்மு இல்லை என்பதை புரிந்து கொள்கிறான்.

இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவன் போல இருக்கும், கார்த்திக், வாங்க தீபாவை போய் பாத்துட்டு வரலாம் என்று சொல்ல அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடிவிடுகிறாள் மறுபக்கம், கார்த்திக் போட்ட திட்டப்படி ரியாவின் முன்னாள் கணவன், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்ட, மதுவை சந்திக்க போகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், ரியா மதுவை பார்க்க வர மது தற்கொலை செய்வதற்காக செட்டப் ஒன்றை ஏற்பாடு செய்து கேமராவையும் ஆன் செய்து வைக்கிறான். வீட்டுக்கு வந்த ரியாவிடம் நான் தற்கொலை பண்ணிக்க கூடாதுன்னா என் கூட வந்து வாழு. என்கிட்ட இப்ப 10 லட்சம் ரூபாய் இருக்கு, நாம அதை வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழலாம் என்று சொல்கிறான்.

அதைக்கேட்டு கடுப்பான ரியா, என்னது 10 லட்ச ரூபாயா? நான் பல கோடிக்கு சொந்தக்காரி ஆக போறேன். கூடிய சீக்கிரம் அபிராமி அருணாச்சலத்தை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு கார்த்திக் அருண் ஆகியோரை வீட்டை விட்டு வெளியே தள்ளி அந்த மொத்த சொத்துக்கும் சொந்தக்காரியாக போறேன். அதுக்குத்தான் ஆனந்த காதலிக்கிற மாதிரி நடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்படி இருக்கும்போது நீ 10 லட்ச ரூபாய்க்கு என்னை வானு கூப்பிடுற என்று சொல்லி பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள்.

குழப்பத்தில் தீபா: மறுபக்கம் ரம்யா மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பாக பார்க்க தீபா, அவளை பிடித்து என் ஹஸ்பண்ட் உன்னை பார்க்கணும்னு சொன்னாரு வா, என்று கூட்டிச் சென்று கார்த்திக் முன்னாடி நிறுத்தி இவர்தான் அம்மு என்று அறிமுகம் செய்கிறாள். கார்த்திக் நீங்க இங்க என்ன பண்றீங்க என்று கேட்கிறான். இதைப்பார்த்த தீபா, அம்முவை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்று கேட்கிறாள். உடனே அம்மு, கார்த்திக் என் கம்பெனில தான் வேலை செய்கிறார், எனக்கு முன்னாடியே தெரியும் என்று சொல்லி நான் தீபாவோட ஃபிரண்ட் என கேஷுவலாக பேசுகிறாள்.

ஆதாரத்தோடு வரும் மது: மறுபக்கம், ரியா பேசிய வீடியோ ஆதாரத்துடன் மது, மண்டபத்துக்கு வர ஐஸ்வர்யாவின் மீது மோத இவனைப் பார்த்த ஐஸ்வர்யா இவன் எதுக்கு இங்கு வந்தான் என்று யோசிக்கிறாள். பின் ரியாவிடம் சென்று, நீ இங்க இருந்து போய்விடு என்று சொல்ல அவள், நான் சவால் விட்ட மாதிரி பரமேஸ்வரி பாட்டி கால்ல ஆனந்தோட சேர்ந்து ஆசீர்வாதம் வாங்குவேன் என்று சொல்கிறாள்.

அடுத்ததாக மது கார்த்திக்கை சந்தித்து வீடியோ ஆதாரத்தை கொடுக்க கார்த்திக் ஆனந்தை போன் பண்ணி வரவைத்து வீடியோ ஆதாரத்தை காட்ட போகும் சமயத்தில் ரியா அவனுக்கு போன் செய்து மீனாட்சியை கடத்தி வச்சிருக்கேன் அவ உயிரோட வேணும்னா நீ எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறாள். இதனால் கார்த்திக் ஆனந்திடம் உண்மையை சொல்லாமல் சும்மா தான் வர சொன்னேன் என்று சமாளித்து விடுகிறான்.

சவால் விட்ட தீபா: பிறகு ரியா மண்டபத்துக்கு வந்துவிட கார்த்திக் அப்போ மீனாட்சி பக்கத்துல இங்கே தான் கடத்தி வச்சிருக்கா என்று கணக்கு போட்டு மதுவுடன் கிளம்பிச் செல்ல ரியா, தீபாவை சந்தித்து உன் புருஷனால என்னை ஒன்னும் பண்ண முடியாது என்று சவால் விட பதிலுக்கு தீபா என் புருஷன் உன் முகத்திரையை கிழிச்சு ஜெயிலுக்கு அனுப்ப தான் போறாரு என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X