ரகசிய திருமணம் செய்த துர்கா.. சாமுண்டீஸ்வரி எடுக்கும் விபரீத முடிவு.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி துர்காவிற்கு மாப்பிள்ளை பார்த்திருக்க துர்கா நவீனிடம் விஷயத்தை சொல்கிறாள். அவன் நாளைக்கு கோவிலில் உனக்காக காத்திருப்பேன். நீ வந்தா நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறான். அடுத்த நாள் சாமுண்டீஸ்வரி துர்காவிடம் ஒரு புடவையை கொடுத்து நிச்சயத்துக்கு தயாராக சொல்கிறாள். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், வீட்டில் துர்காவின் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் நடக்க அவளை காணாததால் எல்லோரும் தேடத் தொடங்குகின்றனர். கார்த்திக் துர்காவை தேடி கோவிலுக்கு வருகிறான். அதற்குள் கோவிலில் நவீன் துர்காவும் திருமணம் செய்து கொள்கின்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் கார்த்திக், பெத்தவங்க சம்மதத்துடன் தான் கல்யாணம் பண்ண வேண்டும், அதைவிட்டு விட்டு இப்படி ஒரு தப்பான முடிவு எடுத்த இருக்கீங்க, எது எங்கே போய் முடியும்னு தெரியுமா என்று கேட்டு சத்தம் போடுகிறான். அப்போது, நவீன், திடீரென துர்காவிற்கு நிச்சயம் என்று சொன்னதும் என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி செய்துவிட்டேன், நீ தான் இந்த பிரச்சனையில் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: அப்போது, துர்கா, ஆமாம் மாமா நீங்க தான் அம்மாவிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும். அவங்க நீங்க சொன்னத்தான் கேட்பார்கள் என்று சொல்கிறாள். இதையடுத்து, முதலில் கழுத்தில் இருக்கும் மாலையை கழட்டுங்க, யாராவது பார்த்தால் பிரச்சனையாகிவிடும். அந்த தாலியை மறைத்துவை, கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம், சரியான நேரம் வரும் போது அத்தையிடம் சொல்லவிடலாம் என கார்த்திக், துர்காவை வீட்டிற்கு அழைத்து செல்கிறான். வீட்டில், நிச்சயத்திற்கான வேலை நடந்து கொண்டு இருக்க, சாமுண்டீஸ்வரி, துர்காவை பார்த்து எங்கே போன என்று கேட்க, நான் கோவிலுக்கு போயிருந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறாள். இதையடுத்து, வீட்டில் நிச்சயம் நடந்து முடிகிறது.
துர்காவின் உயிரை காப்பாற்றிய ரேவதி: தனது அறையில் தனியாக இருக்கும் துர்கா, நவீனை கல்யாணம் செய்து கொண்டது அம்மாவிற்கு தெரிந்தா என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை. கல்யாணம் ஆனதை வெளியில் சொல்லவும் முடியல, இப்படி எல்லா பக்கத்தில் இருந்து பிரச்சனை வந்தா என்ன செய்வது. இப்படி ஒரு கஷ்டத்தோட வாழ்வதை விட, நம்ம முடிவை நாம தேடிக்கொள்வது தான் சரி என துர்கா ஒரு தவறான முடிவை எடுப்பதற்கான, புடவையை எடுக்கிறாள். இந்த நேரத்தில், ரேவதி, இன்னைக்கு துர்காவின் முகமே சரியில்லை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால், ராஜா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அது என்ன விஷயம் என்று துர்காவிடமே கேட்டு விடலாம் என்று ரேவதி, துர்காவின் அறைக்கு செல்கிறாள்.
அந்த நேரம் துர்கா, புடவையை பேனில் போடுவதை பார்த்து பதறிப்போன, ரேவதி அவளை தடுத்து நிறுத்துகிறாள். எதற்கு இப்படி ஒரு முடிவை எடுத்த, என்ன ஆச்சு என்று கேட்க, துர்கா என்னை எதுவும் கேட்காதே எல்லா விஷயமும் மாமாவிற்கு தெரியும், அவர் உன்னிடம் எதையும் சொல்லவேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











