ரியாவின் முகத்திரை கிழிந்தது.. பேரதிர்ச்சியில் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரியாவின் முன்னாள் கணவன் மது, கார்த்திக்கை சந்தித்து பேசிய வீடியோ ஆதாரத்தை கொடுத்து விடுகிறான். உடனே கார்த்திக் ஆனந்திற்கு போன் பண்ணி வரவைத்து வீடியோ ஆதாரத்தை காட்ட போகும் சமயத்தில் ரியா, கார்த்திக்கிறகு போன் செய்து மீனாட்சியை கடத்தி வச்சிருக்கேன் அவ உயிரோட வேணும்னா நீ எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறாள். இதனால் கார்த்திக் ஆனந்திடம் உண்மையை சொல்லாமல் சும்மா தான் வர சொன்னேன் என்று சமாளித்து விடுகிறான்.
பின் ரியா மண்டபத்துக்கு வந்துவிட கார்த்திக், மீனாட்சியை பக்கத்துல இங்கே தான் கடத்தி வச்சிருக்கா என்று கணக்கு போட்டு மதுவுடன் கிளம்பிச் செல்ல ரியா, தீபாவை சந்தித்து உன் புருஷனால என்னை ஒன்னும் பண்ண முடியாது என்று சவால் விட பதிலுக்கு தீபா என் புருஷன் உன் முகத்திரையை கிழிச்சு ஜெயிலுக்கு அனுப்ப தான் போறாரு என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் மீனாட்சியை அடைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க, கார்த்திக் தனது போலீஸ் நண்பரிடம் உதவியை கேட்கிறான். இதையடுத்து செல்போன் டவரை வைத்து, மீனாட்சி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கார்த்திக். அங்கு இருக்கும் ரவுடிகளை அடித்து உதைத்துவிட்டு அண்ணி மீனாட்சியை காப்பாற்றி வெளியே அழைத்து வருகிறான்.
பேரதிர்ச்சி: மறுபக்கம், மண்டபத்தில் பரமேஸ்வரி பாட்டி வந்திருக்க அனைவரும் ஜோடி ஜோடியாக ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என முடிவு செய்து தயாராக இருக்கின்றனர். ரியா ஆனந்துடன் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க தயாராகிறாள். அப்போது பரமேஸ்வரி பாட்டி ரியாவை பார்த்து யார் இது என்று கேள்வி எழுப்ப, தீபா அது ஆனந்த்தோட ஃப்ரெண்ட், கல்யாணத்திற்காக வந்து இருக்காங்க என்று சொல்லி பிளேட்டை மாற்றி விட ரியாவிற்கு எதுவும் பேச முடியாமல் போகிறது. அதன் பிறகு கார்த்திக் மீனாட்சியுடன் மண்டபத்திற்கு வந்து விட ரியா பேரதிர்ச்சி அடைகிறாள்.
ரியாவின் உண்மை முகம்: இதை தொடர்ந்து கார்த்திக், தீபா இருவரும் ஆனந்தை தனியாக அழைத்து சென்று ரியா, ஐஸ்வர்யாவை கடத்தி வைத்து கொல்ல முயற்சி செய்ததை சொல்ல, ஆனந்த் அதை நம்ப மறுக்கிறான். இதையடுத்து, கார்த்திக் ரியாவின் முன்னாள் கணவன் மதுவிடம் பேசிய வீடியோவை காட்டி அவளை பற்றிய உண்மையை உடைக்கின்றனர். பரமேஸ்வரி பாட்டி இருப்பதால் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் எனவும் சொல்ல ஆனந்த் அமைதியாக வெளியே வருகிறான். பிறகு அருண் - ஐஸ்வர்யா, ஆனந்த் - மீனாட்சி மற்றும் கார்த்திக் - தீபா ஆகியோர் ஜோடி ஜோடியாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











