கார்த்திக்கை காதலிக்கும் ரேவதி.. நெற்றியில் வைத்த குங்குமம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், நவீன், துர்கா இருவரும் யாருக்கும் தெரியாமல் கோவில் கல்யாணம் செய்து கொள்கின்றனர். வீட்டில் நிச்சயத்திற்கான வேலை நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில், துர்கா வீட்டில் இல்லாததால் சந்தேகப்படும், கார்த்திக், கோவிலில் அவளை தேடி வர, இருவரும் திருமணம் செய்து கொண்டதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து, இப்போதைக்கு இந்த கல்யாண விஷயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம், சரியான நேரம் பார்த்து அத்தையுடம் இதைப்பற்றி பேசலாம் என்று சொல்லிவிட்டு, துர்காவை வீட்டிற்கு அழைத்து செல்கிறான் கார்த்திக்.

துர்கா வீட்டிற்கு வந்ததும், அவளுக்கு நிச்சயதார்த்தம் நடந்த முடிகிறது. இதனால், மன வேதனையில் இருக்கும் துர்கா, இதற்கு மேல் வாழ்ந்து என்ன செய்வது என முடிவு எடுத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறாள். இந்த நேரம் பார்த்து ரேவதி, துர்காவின் அறைக்கு வர, அவள் துர்காவை காப்பாற்றி விடுகிறாள். பின், இந்த முடிவுக்கு என்ன காரணம் என கேட்க, என்னை எதுவும் கேட்காதே, எதுவாக இருந்தாலும், மாமாவிடம் கேள் அவருக்குத்தான் தெரியும் என்று சொல்கிறாள். இதையடுத்து, ரேவதி, கார்த்திக்கிடம் என்ன விஷயம் என்று கேட்க, கார்த்திக், நவீனும், துர்காவிடம் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள் என்கிற உண்மைய சொல்லுகிறான். இதைக்கேட்டு ரேவதி அதிர்ச்சி, அடைந்து துர்காவை சரமாரியாக திட்டுகிறாள். பின் கார்த்திக், நடந்த முடிந்த விஷயத்தை பற்றி பேசி பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். அத்தையிடம் இதுபற்றி சரியான நேரத்தில் சொல்லிவிடலாம் என்று சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், தீபாவின் பிறந்த நாள் என்பதால் ஜானகி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கும் போது, ரேவதி இவர்கள் வீட்டிற்கு வருகிறாள். நீங்க சொன்னதை பாலோ பண்ணேன் கை வலி குறைந்து விட்டது என ரேவதி நன்றி சொல்கிறாள். என் மகளுக்கு இன்று பிறந்த நாள், அவள் இப்போது உயிரோடு இல்லை, நீ இருந்த இந்த பூஜையில் கலந்து கொள் என்று சொல்ல, ரேவதி அந்த பூஜையில் கலந்து கொள்கிறாள். இதையடுத்து, தீபாவிற்காக வாங்கிய புடவையை மைதிலி ரேவதிக்கு கொடுக்கிறாள். பின் வீட்டிற்கு வரும், ரேவதி, கார்த்திக்கிடம் புடவையை காட்டி, நன்றாக இருக்கிறாதா கேட்கிறாள். நான் கோவில் ஒரு அம்மாவை பார்த்தேன், அவங்களுடைய மகளுக்கு இன்று பிறந்த நாளாம் அவர்கள் தான் இந்த புடவையை கொடுத்தார்கள் என்கிறாள். காலையில் நான் உன்னை தேடினேன் எங்கே போனா என்று கேட்க, கோவிலிக்கு போய் இருந்தேன். இந்த கும்குமம் என்று கொடுக்க, ரேவதி, நீங்களே வைத்து விடுங்கள் என்றதும். கார்த்திக் ரேவதியின் நெற்றியில் பொட்டு வைத்து விடுகிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

அவமானப்பட்ட பாட்டி: இதனை தொடர்ந்து இன்னொரு பக்கம் பரமேஸ்வரி பாட்டி கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க முளைப்பயிர் எடுக்க வேண்டும் என்று பேசுகின்றனர், பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியின் 4 பெண்களின் பெயர்களையும் எழுத சொல்கிறார். அடுத்து பரமேஸ்வரி பாட்டி, கும்பாபிஷேகத்திற்காக புது துணி எடுத்து கொண்டு சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகிறார். கும்பாபிஷேகம் குறித்து பேச சாமுண்டீஸ்வரி எதாவது காரணத்தை சொல்லிட்டு இந்த வீட்டிற்கு வந்துட்டியே இருப்பீர்களா என்று கோபப்படுகிறாள். மேலும் சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டியை அவமானப்படுத்தி அனுப்புகிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X