அபிராமி மீது பாய்ந்த குண்டு.. தப்பி ஓடிய ரியா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், திருமண மண்டபத்தில், ரியா ஆனந்த்துடன் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க தயாராகிறாள். அப்போது பரமேஸ்வரி பாட்டி ரியாவை பார்த்து யார் இது என்று கேள்வி எழுப்ப, தீபா அது ஆனந்த்தோட ஃப்ரெண்ட், கல்யாணத்திற்காக வந்து இருக்காங்க என்று சொல்லி பிளேட்டை மாற்றி விட ரியா எதுவும் பேச முடியாமல் போகிறது.
மறுபக்கம் கார்த்திக், தீபா இருவரும் ஆனந்தை தனியாக அழைத்து சென்று ரியா, ஐஸ்வர்யாவை கடத்தி வைத்து கொல்ல முயற்சி செய்ததை சொல்ல, ஆனந்த் அதை நம்ப மறுக்கிறான். இதையடுத்து, முன்னாள் கணவன் மதுவிடம் ரியா பேசிய வீடியோவை காட்டி அவளை பற்றி உண்மை தெரிந்து ஆனந்த் வருத்தப்படுகிறான். பரமேஸ்வரி பாட்டி இருப்பதால் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என கார்த்திக் சொல்ல ஆனந்த் அமைதியாக வெளியே வருகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

இன்றைய எபிசோடு: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ஆனந்திற்கு உண்மை தெரிந்த பிறகு ரியாவை பார்த்து, என்ன தைரியம் இருந்தா நீ என் மனைவியை கடத்தி இருப்ப, உனக்கு அவ்வளவு தைரியமா, கார்த்திக் வீடியோவை என்னிடம் காட்டிவிட்டான் விழா முடிந்ததும் உன்னை வீட்டை விட்டு துரத்துகிறேன் என்று சொல்ல, வசமாக மாட்டிக்கொண்டதால் கடுப்பான ரியா கையில் துப்பாக்கியை எடுத்து கொண்டு எல்லாரையும் பாய்ண்ட் அவுட் செய்கிறார். இதனால், அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மிரட்டிய ரியா: உங்கள் எல்லாரையும் பத்தி எனக்கு தெரியும் என்று பேச தொடங்குகிறாள். பிறகு கார்த்தியை நோக்கி துப்பாக்கியை வைத்துக்கொண்டு, இந்த குடும்பத்தில் என்னை ஒருத்தியா ஏத்துக்கோங்க உங்களை உயிரோட விட்டுறேன் என்று மிரட்டுகிறாள். இதனால் எல்லாரும் பதற்றம் அடைய கார்த்திக் நீ செய்தது ரொம்ப தப்பு, உன்னை எங்களால் ஏத்துக்க முடியாது என்று சொல்கிறான்.
அபிராமி மீது குண்டு பாய்ந்தது: என்னுடைய வாழ்க்கை இப்படி ஆக நீ தான் காரணம், அப்போ நீ தான் சாகனும்.. செத்துப்போ என்று சுட துணிகிறாள். இந்த சமயத்தில் அபிராமி ஓடி வந்து கார்த்தியை காப்பாற்றி குண்டை வாங்கி கொள்கிறாள். அபிராமியின் உடம்பில் மூன்று குண்டுகள் பாய அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











