சாமுண்டீஸ்வரி புடவையில் தீ.. கோவில் கும்பாபிஷேகத்தில் நடந்தது என்ன? - கார்த்திகை தீபம்!

சென்னை: பரமேஸ்வரி பாட்டி கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க முளைப்பயிர் எடுக்க வேண்டும் என்கிறாள். பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியின் 4 பெண்களின் பெயர்களையும் எழுத சொல்கிறார். அடுத்து பரமேஸ்வரி பாட்டி, கும்பாபிஷேகத்திற்காக புது துணி எடுத்து கொண்டு சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகிறார். கும்பாபிஷேகம் குறித்து பேச சாமுண்டீஸ்வரி ஏதாவது காரணத்தை சொல்லிட்டு இந்த வீட்டிற்கு வந்துட்டியே இருப்பீர்களா, உங்களுக்கு வெக்கமாவே இல்லையா என்று கோபப்படுகிறாள்.

சாமுண்டீஸ்வரி இப்படி பேசுவதை கேட்கமுடியாத, ரேவதி, அம்மா, பாட்டியை என்ன வார்த்தையால் திட்டுவது என்று கூட தெரியாத, அவங்க வயதில் பெரியவர்கள், தயவு செய்து வயதிற்காவது மரியாதை கொடுங்கள் என்று சொல்கிறாள். அப்போது , சாமுண்டீஸ்வரி, என்னது வயசுக்கு மரியாதையா... ஏய் கிழவி என்ன விஷயம் என்பதை சொல்லிவிட்டு போ என்று சொல்கிறாள். அப்போது, பாட்டி, என் பேத்திகள் கும்பாபிஷேகத்தில் முளைப்பாறி எடுக்க வேண்டும் என்று சொல்ல, அது எல்லாம் முடியாது என்று பேசி, பரமேஸ்வரி பாட்டியை அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு: அடுத்த நாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சாமுண்டீஸ்வரியும் குடும்பத்துடன் கிளம்புகிறாள். கிளம்புவதற்கு முன் சாமுண்டீஸ்வரி சாமி குடும்பிடும் சமயத்தில், ராஜராஜன் வேண்டும் என்றே புடவையில் தீப்பிடிக்க வைக்கிறான். மேலும், இது என்னவோ தெய்வ குத்தம் போல தெரிகிறது. நீ முளைப்பாரி தூக்க மறுப்பு சொன்னதால் தான் இப்படி நடந்து இருக்கலாம் என்று சாமியார் சொல்ல சாமுண்டேஸ்வரி மகள்கள் முளைப்பாரி எடுக்க சம்மதம் சொல்கிறாள். மேலும் ரோகிணியை தனியாக அழைத்து உன் புருஷன் நல்லவன் என்று பில்டப் செய்து பேச வைக்கின்றனர். இதையடுத்து இவர்கள் கோவிலுக்கு கிளம்ப சாமுண்டேஸ்வரி நீங்க முன்னாடி போங்க நான் வரேன் என்று சொல்கிறாள். இதையடுத்து ராஜராஜன் பரம்பரை வீட்டிற்கு போகலாம் என்று சொல்கிறார்.

சிவனாண்டியும் சந்திரகலாவும் அபிராமியை கோவிலுக்கு வர வைத்தால், கார்த்தியின் அம்மா தான் அபிராமி என்பது சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்துவிடும் என நினைத்து அபிராமியை கோவிலுக்கு அழைத்து வர திட்டம் போடுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, விருமன் இந்த திருவிழா நல்லபடியாக நடந்து விட்டால், இந்த ஊரில் எனக்கு மரியாதையே இருக்காது என்று சாப்பாட்டில் விஷத்தை கலக்க திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X