தீபாவின் தோழி மீது கார்த்திக்கிற்கு வந்த சந்தேகம்.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், பழத்துடன் ரம்யா, தீபாவை பார்க்க வீட்டிற்கு வருகிறாள். அப்போது தீபாவும் அபிராமியும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது வரும் ரம்யா, டாக்டர் என்ன சொன்னாரு என்று தீபாவை நலம் விசாரிக்கிறாள். பழம் கொண்டு வந்தேன் ஜூஸ் போட்டு கொடுங்க என்று அபிராமியிடம் கொடுக்கிறாள்.

இதையடுத்து ஜூஸ் போட்டு கொண்டு வரும், அபிராமியிடம் ஜூஸ் கிளாசை வாங்கிக்கொண்டு, என் பிரண்டுக்கு நான் தான் ஜூஸ் கொடுப்பேன் என்று சொல்லி, நைசாக கிளாசை வாங்கிக் கொண்டு அதில், மாத்திரையை கலந்து விடுகிறாள். அதை குடித்த தீபா கொஞ்ச நேரத்தில் எல்லாரிடமும் கோபப்பட்டு பொருட்களை தூக்கி போட்டு சைக்கோ போல் நடந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ஜூஸ் குடித்த பின் சைகோ நடந்து கொண்ட தீபா, மயக்கம் போட்டு விழுகிறாள், உடனே கார்த்திக்கிற்கு இந்த விஷயத்தை சொல்ல அவன் ஆபிசில் ரம்யாவிடம் பெர்மிஷன் கேட்டு வீட்டிற்கு வருகிறான். பிறகு தீபாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல டாக்டர் பயப்படுற மாதிரி எதுவும் இல்ல, டிப்ரஷனால் இப்படி ஆகி இருக்கும் என்று சொல்லி அனுப்ப மீனாட்சி எதையோ கேட்க வர கார்த்திக் எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு பொய் பேசி கொள்ளலாம் அண்ணி என்று வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

பிறகு தீபாவிடம் என்னாச்சு என்று கேட்க அவள், அத்தை ஜூஸ், கொடுக்க , அதை குடிச்ச பிறகு தான் இப்படி ஆச்சு என்று சொல்ல, நீங்க ஜூஸ் குடிக்கும் போது வேறு யாராவது இருந்தாங்களா என்று கேட்க, தீபா என் தோழி அம்மு இருந்தாள் என்று சொல்கிறாள். இதையடுத்து அம்மு மீது சந்தேகப்படும் கார்த்திக். தீபா குடித்து வைத்த ஜூஸ் டம்பளரை எடுத்து கொண்டு லேபிற்கு கிளம்புகிறான். இதையடுத்து அந்த ஜூசில் என்ன கலந்து இருக்கு என்பதை தெரிந்து கொள்கிறார்.

பதறிய ரம்யா: அடுத்த நாள் ரம்யா ஆபிஸ்க்கு அவளை பார்ப்பதற்காக தோழி ஒருவர் வருகிறார், ரம்யா இல்லாத நிலையில் அவளுக்கு போன் செய்து கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்திருப்பதாக சொல்கிறார். வீட்டு முகவரியும் தெரியாது என்பதால் ஆபிஸிலேயே அம்மு என்று பெயர் எழுதி பி.ஏ-விடம் கொடுக்க ரம்யா அதை தனது கேபினில் வைக்க சொல்கிறாள்.பிறகு கார்த்திக்கிற்கு அம்மு என்ற பெயர் தெரிய கூடாது என்று பதறியடித்து ஆபிஸ் ஓடி வருகிறாள். இங்கு கார்த்திக் ரம்யா ரூமுக்குள் செல்ல கல்யாண பத்திரிகையை பார்த்து விடுவானோ என்ற பில்டப் எகிற அதற்குள் ரம்யா வந்து அந்த பத்திரிகையை மறைத்து விடுகிறாள்.

ஐடி ரைடு: அடுத்து ரம்யா கம்பெனிக்கு ஐ.டி ரைடு வருகின்றனர். கணக்கில் காட்டாத பணம் இருப்பதாக சொல்லி எடுத்து செல்ல ரம்யா யார் இப்படி பண்ணது என்று சத்தம் போட ஒருவன், கார்த்திக் தான் அது, அவர் தான் ஐ.டி இது, அதுனு போனில் பேசி கொண்டிருந்ததாக சொல்ல ரம்யா அவர் இப்படி பண்ணி இருக்க மாட்டாரு என்று சொல்ல, ரம்யா கார்த்திக்கிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள். பிறகு அந்த நபர் ஆனந்துக்கு போன் செய்து நீங்க சொன்ன மாதிரியே செய்துட்டேன் என்று சொல்லி பேச கார்த்திக் ஆனந்த் தான் இப்படி செய்ய சொன்னதாக புரிந்து கொள்கிறான்.

பிளான் போடும் ரம்யா: பிறகு ரம்யா, கார்த்திக்கை கூப்பிட்டு கம்பெனி விஷயமா பெங்களூர் போறேன், நீங்களுடம் கூட வாங்க என்று சொல்லி கூப்பிட கார்த்திக்கும் ஓகே சொல்ல பி.ஏ-விடம் ரெண்டு பேருக்கும் டிக்கெட் போட சொல்கிறாள். இந்த விஷயம் அறிந்த மாணிக்கம் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கோ.. அப்புறம் இந்த கம்பெனியோட அடுத்த ஓனர் நீ தான் என்று சொல்ல கார்த்திக் தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X