விருமன் சதியை முறியடித்த கார்த்திக்.. கோவிலில் நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சிவனாண்டியை ஆகியோர் சந்தித்து இந்த விழாவை எப்படியாவது கெடுக்கணும் என யோசிக்கின்றனர். இன்னொரு பக்கம் விருமன் மற்றும் இன்ஸ்பெக்டர் என இருவரும் சேர்ந்து திருவிழாவை சீர்குலைக்க திட்டம் போடுகின்றனர். பக்தர்களுக்காக சமைக்கும் உணவில் விஷத்தை கலக்க முடிவெடுக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் செய்து விஷத்தையும் கலக்கின்றனர். இது தெரியாமல் கோவிலில் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
அதாவது, கோவிலில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாற ஊர்க்காரர் ஒருவர் ஓடி வந்து யாரும் சாப்பிடாதீங்க சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பாடுகிறது. உடனே விருமன் இந்த நேரத்தில் நான் இங்கே இருந்தால், பிரச்சனை பெரிதாகி விடும் நான் கிளம்புகிறேன் என்று சொல்கிறான். இப்போது, இன்ஸ்பெக்டர் எதுக்கு நீங்க போக வேண்டும், இப்போதுநீ இங்கே இருந்து போனத்தான், எல்லாருக்கும் உன்மேல சந்தேகம் வரும். அதான் விஷம் கலந்தவனை பஸ் ஏத்தி அனுப்பியாச்சே என்று சொல்ல, இருவரும் சேர்த்து அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்க்கின்றனர்.

கார்த்திகை தீபம்: அப்போது, கார்த்திக் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொல்ல அந்த ஊர்க்காரர்களில் ஒருவன், அவர் பொய் சொல்றாரு என்று சொல்ல கார்த்திக் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு காட்டுகிறான். அவனுக்கு எதுவும் ஆகாதால் பிறகு ஊர்க்காரர்கள் உட்கார்ந்து சாப்பிடுகின்றனர். இதைத்தொடர்ந்து ஃபிளாஷ் பேக்கில் சாப்பாட்டில், சமையல் செய்யும் இடத்தில், விஷபாட்டில் இருப்பதை பார்த்த கார்த்திக், இந்த இடத்திற்கு புதிதாக யார் வந்தார்கள் என்று விசாரிக்கிறான். அப்போது, அங்கு இருந்தவர் ஒருவன் பற்றி விஷயத்தை சொல்ல, மயில்வாகனம், கார்த்திக் இருவரும் சேர்த்து அந்த ஆள் பஸ்சில் இருக்கும் போது கையும், களவுமாக பிடிக்கின்றனர்.
கார்த்திக் அதிரடி பிளான்: அவன், சம்பாரில் விஷயம் கலந்த விஷயத்தை சொல்ல, கார்த்திக் அந்த நேரத்தில் மொத்த சாப்பாட்டையும் மாற்றியது தெரிய வருகிறது. மேலும் கார்த்தி மற்றும் மயில்வாகனம் ஆகியோர் விருமனை பார்த்து சாப்பாடு சூப்பரா இருக்கு வாங்க சாப்பிடுங்கள் என்று கலாய்கின்றனர். இதையடுத்து, பரமேஸ்வரி பாட்டி, கோவில் விஷயத்தில் அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் இப்படி செய்வார்களா, இது மட்டும் தாத்தாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால், ரொம்ப வருத்தப்படுவார், எல்லாத்துக்கும் காரணம் அந்த விருமன் தான். அவன் தான், இந்த கும்பாபிஷேகம் நடக்கக்கூடாது என்று நினைக்கிறான். இவனை இதுக்கு மேலையும் விடக்கூடாது என்று சொல்கிறாள். இதைக்கேட்ட, கார்த்திக் , அமைதியாக இருங்க பாட்டி, கும்பாபிஷேகம் நல்லபடியாக முடியட்டும் அதுக்கு பிறகு இவர்களை பார்த்துக்கொள்ளலாம் என்கிறான்.
இதையடுத்து, ரேவதி மற்றும் பரமேஸ்வரி பாட்டி ஆகியோர் கடை வீதிக்குச் செல்ல அங்கு கைரேகை பார்க்கும் பெண்மணி ரேவதி கையை பார்த்து உனக்கு புருஷனா வந்து இருப்பது ராஜாதிராஜன் என்று சொல்ல ரேவதி, நீங்க தப்பா சொல்றீங்க, இவர் தான் என் கணவர் இவர் சாதாரண டிரைவர் தான் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











