தாலிக்கு ஆசைப்படும் ரம்யா.. விபரீத ஆசையால் அவள் எடுக்கும் முடிவு..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமிக்கு முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து அபிராமியை ஆபரேஷனுக்கு அழைத்து செல்ல ஆளாளுக்கு அபிராமிக்கு ஆறுதல் சொல்கின்றனர். அப்போது தீபா என் தாலியை காப்பாற்றிய அபிராமிக்காக இந்த தாலியை கழட்டி வைக்கிறேன். நீங்க உயிரோடு வந்து இந்த தாலியை எடுத்துக் கொடுக்கணும், கார்த்திக் சார் கையால் என் கழுத்தில் தாலி கட்டுறதை பார்க்கணும், பார்ப்பீங்க அது வரைக்கும் மஞ்ச கயிறோடு தான் இருப்பேன் என்று கழுத்தில் இருக்கும் தாலி செயினை கழட்டி வைக்கிறாள்.இதையடுத்து இன்று நடக்கப்போகிறது என்ன என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: கார்த்திகை தீபம் இன்றைய சீரியலில், அபிராமிக்காக தீபா தாலியை கட்டியதைப் பார்த்து மீனாட்சி கண்கலங்கி அழுகிறாள். உனக்கு அவங்க மேல இவ்வளவு பாசமா என்று அந்த நேரத்தில் அனைவரும் கண்கலங்கி நிற்கின்றனர். அப்போது, தீபா, தயவு செய்து இந்த முடிவை யாரும் தடுக்காதீங்க,அவங்க நல்லபடியாக திரும்பி வருவாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்லி அழுகிறார். அப்போது கார்த்தியை பார்த்துவிட்டு, உங்களை கேட்காமல் நான் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டேன் என்று சொல்ல, கார்த்திக் நீ எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று சொல்கிறார்.

Television zee tamil Karthigai Deepam Serial

தாலிக்கு ஆசைப்படும் ரம்யா: இதை தெரிந்து கொண்ட ரம்யா, தீபா கழுத்தில் மீண்டும் அந்த தாலியை ஏறவே விடக்கூடாது, அந்த தாலி என் கழுத்திற்கு வர வேண்டிய தாலி, இனி அந்த தாலி உனக்கு கிடைக்கவே விட மாட்டேன் என்று கூறிக்கொண்டு புது திட்டம் ஒன்றை போடுகிறாள். அபிராமி உயிரோடு வந்தால் தானே, மறுபடியும் தாலி தீபா கழுத்திற்கு போகும், அபிராமியின் கதையை இங்கேயே முடித்துவிட திட்டம் போடுகிறாள்.

ஐஸ்வர்யாவை மிரட்டும் ரியா: மறுபக்கம் போலீஸ் துரத்துவதால் என்ன செய்வது என்று தெரியாத ரியா, ஐஸ்வர்யாவிடம் நான் பதுங்கிக்கொள்ள ஓர் இடம் வேண்டும் என்று கேட்கிறாள். ஐஸ்வர்யா அதையெல்லாம் செய்ய முடியாது என்று சொல்ல, இப்போ மட்டும் தீ உதவி செய்யவில்லை என்றால், நீ தான் அபிராமியை சுடசொன்னது என்று போலீசில் சொல்லிவிடுவேன் என்று சொல்ல, பயந்து போன ஐஸ்வர்யா, அம்மாவிற்கு போன் செய்து, ரியா அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறாள். மறுபக்கம் ஐஸ்வர்யா மீது சந்தேகத்தோடு போலீசார் அவரை கண்காணித்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X