பரிகாரத்திற்கு ரெடியான தீபா.. போலி ஜோசியரை தயார் செய்யும் ரம்யா.. கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரியாவை போலீஸ் துரத்துவதால் ஐஸ்வர்யாவிடம் உதவி கேட்கிறாள். ஐஸ்வர்யா உதவ முடியாது என்று சொல்ல, இப்போ மட்டும் நீ உதவி செய்யவில்லை என்றால், நீ தான் அபிராமியை சுட சொன்ன என்று போலீசில் சொல்லிவிடுவேன் என்று சொல்ல, பயந்து போன ஐஸ்வர்யா, அம்மாவிற்கு போன் செய்து, ரியா அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறாள்.

மருத்துவமனையில், தீபா தாலியை கழட்டி வைத்துவிட்டு, அபிராமி நல்லபடியாக வரவேண்டும் என்று கண்ணீருடன் காத்திருக்கிறாள். ஆனால் ரம்யா, தீபா கழுத்தில் மீண்டும் அந்த தாலியை ஏறவே விடக்கூடாது, அந்த தாலி என் கழுத்திற்கு வர வேண்டிய தாலி, இனி அந்த தாலி உனக்கு கிடைக்கவே விட மாட்டேன் என்று கூறிக்கொண்டு புது திட்டம் ஒன்றை போடுகிறாள். அபிராமி உயிரோடு வந்தால் தானே, மறுபடியும் தாலி தீபா கழுத்திற்கு போகும், அபிராமியின் கதையை இங்கேயே முடித்துவிட திட்டம் போடுகிறாள் ரம்யா. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

கவலையில் தீபா: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அபிராமிக்கு ஆப்ரேஷன் நடந்து கொண்டு இருக்க அனைவரும் கவலையுடன் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது தீபாவின் அண்ணி, தொடர்ந்த நம்ம குடும்பத்திற்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் பிரச்சனை வருது என்றே தெரியல. ஏதாவது தெய்வ குத்தமாகக்கூட இருக்கலாம். எனக்கு தெரிந்த ஒரு ஜோசியர் இருக்காரு அவரிடம் போய் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும், ஆனால், அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று சொல்கிறாள்.

ரம்யா போட்ட திட்டம்: இதைக்கேட்ட தீபா, அபிராமி அத்தைக்காக நான் நிச்சயம் என்ன பரிகாரமாக இருந்தாலும் செய்வேன் என்று, அந்த ஜோசியர் பற்றிய தகவலை ரம்யாவிடம் சொல்லி, அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரிக்க சொல்கிறாள். இதுதான் சரியான நேரம் என்று யோசித்த ரம்யா, தன்னுடைய ஒரு ஆளை, ஜோசியராக நடிக்க வைக்க திட்டம் போடுகிறாள்.

தீபா கழட்டிய தாலி மீண்டும் அவள் கழுத்தில் ஏறக்கூடாது, அது என் கழுத்தில் தான் ஏறவேண்டும் என்று முடிவு செய்கிறாள். இதனால் போலி சாமியாரிடம் தீபாவிற்கு ஒரு கடுமையான பரிகாரத்தை செய்ய சொல்லி, தீபாவை மருத்துவமனைக்கு வரவிடாமல் செய்து, அந்த நேரததில் கார்த்திக் மனதில் இடம் பிடிக்க திட்டம் போடுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X