விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதியை பயமுறுத்திய அபசகுணம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கும்பாபிஷேக திருவிழாவில், விருமன், சிவனான்டி மற்றும் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து கொண்டு விஷம் கலந்து விடுகின்றனர். இந்த விஷயம் கார்த்திக்கிற்கு தெரிய வர, யாருக்கும் தெரியாமல்,
மொத்த சாப்பாட்டையும் மாற்றிவிடுகிறான். மேலும் கார்த்தி மற்றும் மயில்வாகனம் ஆகியோர் விருமனை பார்த்து சாப்பாடு சூப்பரா இருக்கு வாங்க சாப்பிடுங்கள் என்று கலாய்கின்றனர். இதையடுத்து, பரமேஸ்வரி பாட்டி, கோவில் விஷயத்தில் அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் இப்படி செய்யலாமா, இது மட்டும் தாத்தாவிற்கு தெரிந்தால், வருத்தப்படுவார், எல்லாத்துக்கும் காரணம் அந்த விருமன் தான். அவன் தான், இந்த கும்பாபிஷேகம் நடக்கக்கூடாது என்று நினைக்கிறான். இவனை இதுக்கு மேலையும் விடக்கூடாது என்று சொல்கிறாள். இதைக்கேட்ட, கார்த்திக் , அமைதியாக இருங்க பாட்டி, கும்பாபிஷேகம் நல்லபடியாக முடியட்டும் அதுக்கு பிறகு இவர்களை பார்த்துக்கொள்ளலாம் என்கிறான் இதையடுத்து, இன்று நடக்கப்போகிறது என்ன என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், மைதிலியும், ஜானகியும் கோயிலுக்கு வர, அவங்கள பார்த்த ரேவதி என்னுடைய கணவரை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று அழைத்து வருகிறாள். ஆனால், கோவிலில் கார்த்திக் இல்லாததால், மைதிலி, ஜானகி இருவரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, தூரத்தில் கார்த்திக்கை பார்த்துவிட்ட மைதிலி, இது கார்த்திக் தம்பி போல இருக்கே என்று, அவரை தேடி செல்கிறாள். ஆனால், மைதிலி வருவதற்குள் கார்த்திக் சென்றுவிடுகிறான். அப்போது, ரேவதி மைதிலியிடம் எங்கே போய்ட்டீங்க என்று கேட்க, யாரோ தெரிந்தவர் போல இருந்தது, அதான் பார்க்க சென்றேன் என சொல்லி சமாளிக்கிறாள். பின், ரேவதியிடம் உன்னுடைய திருமணம் காதல் திருமணமா என்று கேட்க, ரேவதி இல்லை, ஆக்சிடென்டா நடந்த திருமணம் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட மைதிலிக்கு சந்தேகம் வருகிறது. அந்த நேரம் அங்கு வரும் பரமேஸ்வரி பாட்டி, முளைப்பாரி எடுக்க நேரமாகிவிட்டது என்று சொல்லியதால் ரேவதி சென்றுவிடுகிறாள்.

கார்த்திகை தீபம்: முளைப்பாரி எடுக்கும் போது ரேவதி தலையில் வைத்த முளைப்பாரி தவறி கீழே விழுந்து விடுகிறது. இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, அங்கிருந்த பெண் ஒருவர், இந்தப் பெண் ஏதோ தவறு செய்து இருக்கிறாள். அதனால், தான் அபசகுணமாக இப்படி நடந்து இருக்கிறது என்று சொல்கிறாள். இதை கேட்டு ரேவதி கண்கலங்கி நிற்கிறாள். உடனே கார்த்தி, ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க அடுத்தவர்களின் மனசு கஷ்டப்படும் என்பது புரிந்து கொள்ளுங்கள். கூட்டமாக இருப்பதால் அது கீழே விழுந்துவிட்டது, இதற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்று சொல்கிறான். கண்கலங்கி நின்ற ரேவதி, அங்கிருந்து சென்றுவிட பாட்டி, கார்த்திக்கிடம் அவளை சமாதானப்படுத்தி அழைத்துவா என்று சொல்லிவிட்டு கிளம்பி அனைவரும் கோவிலுக்கு கிளம்பி விடுகின்றனர்.
கண்கலங்கிய ரேவதி: ரேவதியை சமாதானப்படுத்துவதற்காக சென்ற கார்த்திக், அவங்க பேசியத நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்கிறான். அப்போது, ரேவதி அவங்க சொன்னது போல, நான் நிறைய தவறுகளை செய்து இருக்கிறேன். மகேஷ், மாயா இருவரையும் நல்லவர்கள் என்று நம்பினேன். அதுமட்டுமல்லாமல் உங்களையும் நான் பலமுறை காயப்படுத்தி இருக்கிறேன். அதனால் தான் இப்படி நடந்து விட்டது என்று சொல்லி வருத்தப்படுகிறார். எல்லா பெண்களை போல எனக்கும் முறைப்பாரி எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கடைசியில் எப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுகிறாள் ரேவதி. அப்போது, கார்த்திக் வருத்தப்பட வேண்டாம் வேறு ஒரு முளைப்பாரி இருக்கு அதை எடுத்துக் கொண்டு நாம போகலாம் என்று சொல்லி அழைத்து செல்கிறான். இதையடுத்து என்ன நடந்தது என்று நாளை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











