ராஜராஜனை கொல்ல நடக்கும் சதி.. கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி முளைப்பாரி எடுக்கும் போது, தலையில் வைதத முளைப்பாரி தவறி கீழே விழுந்து விடுகிறது. இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய, அங்கிருந்த பெண் ஒருவர், இந்தப் பெண் ஏதோ தவறு செய்து இருக்கிறாள். அதனால், தான் அபசகுணமாக இப்படி நடந்து இருக்கிறது என்று சொல்கிறாள். இதை கேட்டு ரேவதி கண்கலங்கி நிற்கிறாள். உடனே கார்த்தி, ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க அடுத்தவர்களின் மனசு கஷ்டப்படும் என்பது புரிந்து கொள்ளுங்கள். கூட்டமாக இருப்பதால் அது கீழே விழுந்துவிட்டது, இதற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்று சொல்லி ரேவதியை சமாதானப்படுத்திவிட்டு மீண்டும் முளைப்பாரி எடுக்கின்றனர்.

இன்றைய எபிசோடில், ஜானகி மற்றும் மைதிலி கோவிலில் இருந்து கிளம்புவதாக சொல்ல ரேவதி, இருங்க என்னுடைய கணவரை டிராப் செய்ய சொல்லுறேன் என்று சொல்கிறாள். ஆனால், ஜானகி வேண்டாம் மா நாங்க ஆட்டோவில் போறோம் என்று சொல்லி கிளம்புகிறார்கள். ஆனால், மைதிலிக்கு கூட்டத்தில் கார்த்திகை போல ஒருவரை பார்த்ததை நினைத்துக்கொண்டே இருக்கிறாள். அப்போது, ஜானகி, என்ன மைதிலி ஏதோ யோசனையில் இருக்க என்று கேட்க, நான் கோவிலில் கார்த்திக் மாதிரி ஒருத்தரை பார்த்தேன், கிட்ட போய் பார்க்க போவதற்குள் அவர் கிளம்பிவிட்டார் என்று சொல்கிறாள். அப்போது, ஜானகி கார்த்திக் ஏன் இங்கே வர போகிறார். இது வேறு யாராவது இருக்கும் என்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மறுபக்கம் கார்த்திக், அபிராமிக்கு போன் செய்து, உடனடியாக வீட்டிலிருந்து வேறு ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விடுங்கள் என்று சொல்கிறாள். இதை கேட்ட அபிராமி நம்மிடமே ஏழு, எட்டு வீடு இருக்கும்போது நான் ஏன் வாடகை வீட்டிற்கு போக வேண்டும் என்று கேட்கிறாள். அப்போது கார்த்தி, கும்பாபிஷேகத்தை கெடுக்க அவர்கள் போட்ட பிளானை நான் கெடுத்துவிட்டேன். இதனால், எப்படியாவது வேறு ஒரு திட்டத்தை போடுவார்கள். இதனால் தான் பாதுகாப்பிற்காக வேறு வீட்டிற்கு போக சொன்னேன் என்கிறான். உடனே அபிராமியும் வேறு வீட்டிற்கு சென்றுவிடுகிறாள்.

சொதப்பிய பிளான்: கும்பாபிஷேகத்தை கெடுக்க பிளான் போட்டதால், கார்த்திக் மீது ஆத்திரத்தில் இருக்கும் சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் அபிராமியை கடத்த அவளது வீட்டிற்கு ஆட்களை அனுப்புகின்றனர். ரௌடிகளும் அந்த வீட்டின் சுவரை ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தால், அங்கே யாருமே இல்லாததை பார்த்து விட்டு, சந்திரகலாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்கின்றனர். அப்போது, சிவனான்டி, கார்த்திச் சரியான திறமையானவனா இருக்கிறான். நாம அடுத்து என்ன பிளான் போடுவோம் என்பதை தெரிஞ்சுக்கிட்டு, சரியாக காய்களை நகர்த்திட்டு வருகிறான், அவன நாம சாதாரண ஆளாகவே நினைக்க கூடாது என்கிறான். உடனே சந்திரகலா, அவன் மூளைக்காரனாக இருந்தாலும் அதைவிட நான் மூளைக்காரி என்பதை நான் நிரூபித்து காட்டுகிறேன் என்று வேறு ஒரு திட்டத்தை சொல்கிறாள்.

ராஜராஜன் குறி கேட்க செல்வதை தெரிந்து கொண்ட சந்திரகலா, குறி சொல்ல இருந்த சாமியாரை கடத்தி வேறொரு ஆளை சாமியாராக ஏற்பாடு செய்கின்றனர். ராஜராஜன் குறி கேட்கும் போது அவனை வெட்ட சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X