ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா.. உடைந்து போன கார்த்திக்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரியாவை கண்டுபிடித்து கொடுத்தால் 10 லட்சம் என பேப்பரில் விளம்பரம் வந்திருக்கும் நிலையில், அதைப்பார்த்த ஐஸ்வர்யா பேசாம நாமளே ரியாவை பிடிச்சு கொடுத்துவிட்டோல், பத்து லட்சம் நமக்கு கிடைக்கும் என்று யோசிக்கிறாள். அந்த நேரம் போன் செய்யும் ரியா, பேப்பர்ல இருக்கும் நியூஸை பார்த்து மாட்டி விட்டுடலாம்னு யோசித்தால், உன் அம்மாவையும் உன்னையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்விடுவேன் என்று எச்சரிக்கிறாள்.

பயந்து போன ஐஸ்வர்யா நான், அப்படியெல்லாம் யோசிக்கல ரியா நீ பாத்து பாதுகாப்பா இரு என்று தான் சொல்கிறேன் என்கிறாள். இதையடுத்து நான் கேட்டா கோவப்படமாட்டியே என்று ஐஸவர்யா கேட்க, இல்ல சொல்லு என்கிறாள் ரியா. நீ போலீசில் மாட்டிக்கிட்டு ஜெயிலுக்கு போனா அந்த வைரத்தை என்ன செய்வ என்று கேட்கிறாள். உன்கிட்ட தருவேன் என்று சொல்ல, அதை இப்பவே எனக்கு கொடுத்துவிடு என்று சொல்ல, உன்கிட்ட வைரத்தை கொடுத்துவிட்டு. பிறகு நான் ஜெயிலுக்கு போறதுக்கா என்று கேட்கிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இதையடுத்து கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா வைரத்தின் மதிப்பு என்ன, அதற்கு பங்கு கேட்க, ரியா நீ நான் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா நீ கேக்குற பங்கை கொடுப்பதோடு உங்க அம்மாவுக்கு கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் மற்றும் ஒரு கம்பெனியையும் வாங்கி தருவேன் என்று சொல்கிறாள். இதை கேட்டு ஐஸ்வர்யா பேராசையில் கொடைக்கானலில் எஸ்டேட்டா என்று வாயை பிளக்க, அந்த நேரத்தில் அருண் ஐஸ்வர்யாவை பளாரென அடிக்கிறான்.

ஹாஸ்பிடலில் எங்க அம்மா, உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, நீ சொத்தை பத்தி பேசிட்டு இருக்க, யார் கூட பேசிட்டு இருக்க என்று போனை பிடுங்கி பார்க்கிறான். ரியா ராஜேஸ்வரி போனில் இருந்து போன் செய்ததால் அம்மாவிடம் தான் பேசிட்டு இருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள்.

பரிகார புடவையில் தீபா: இதைத்தொடர்ந்து தீபா பரிகாரம் செய்ய ஏலத்தில் வாங்கி வந்த அம்மன் சேலையை கட்டி கொண்டு சாமியாரை பார்க்க கிளம்ப மீனாட்சி உனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருவது போல் கனவு கண்டதாக சொல்லி தடுக்க முயற்சிக்க கனவு தானே அக்கா, எனக்கு ஒன்னும் ஆகாது என்று கிளம்பி செல்கிறாள்.

Television zee tamil Karthigai Deepam

அம்மன் புடவையில் வரும் தீபாவை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைகிறாள், இந்த புடவையை மாற்றி வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அவள் வீட்ல யார் கிட்டயும் எதுவும் சொல்லலையே என்று கேட்க அவள் கார்த்திக்கிடம் சொன்னதாக சொல்ல ரம்யா மேலும் ஷாக் ஆகிறாள். ஆனால் கார்த்திக் நான் சொன்னதை கேக்கும் நிலைமையில் இல்ல, பிரம்மை பிடித்தது போல் உட்கார்ந்து இருந்ததாக சொல்ல ரம்யா கொஞ்சம் நிம்மதி அடைகிறாள்.

கேமரா மேன் யார்?: மறுபக்கம் கார்த்திக் அப்படியே உட்கார்ந்திருக்க மீனாட்சி அவனுக்கு பால் கொண்டு போய் கொடுத்து குடிக்க சொல்கிறாள், நீயே இப்படி உடைந்து போய்ட்டா ரியாவை எப்படி பிடிக்கிறது? அவளை பத்தி எந்த ஆதாரமும் இல்லனு சொல்றாங்க. அந்த கேமரா மேன் யார்? அவனை உனக்கு தெரியுமா என்று கேட்க கார்த்திக் மொத்தமாக ஒரு ஈவென்ட் கம்பெனி கிட்ட கொடுத்துட்டேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? தீபாவுக்கு வர போகும் ஆபத்து என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X