திருடு போன கோவில் நகை.. அம்மாவை காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம்!

சென்னை: சிவணாண்டியின் ஆட்கள் அபிராமி இருக்கும் வீட்டை கண்டுபுடித்து பரமேஸ்வரி பாட்டி குரலில் கார்த்திற்குஅடிபட்டுவிட்டது என்று சொல்லி, அவளை வெளியே வர வைக்கின்றனர். உண்மையில் எது என்று தெரியாத அபிராமி, காரை எடுத்துக்கொண்டு வெளியே வர, வெளியில் அவளுக்காக காத்துக்கொண்டிருந்த ரௌடிகள் அவளை கடத்தி விடுகின்றனர். இன்னொரு பக்கம் முத்துவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் கூட்டு சேர்ந்து பரமேஸ்வரி பாட்டியின் வீட்டிற்குள் புகுந்து யாருக்கும் தெரியாமல் கோவில் நகைகளை திருடுகின்றனர். அடுத்த நாள் காலையில் கோவிலில் அனைவரும் காத்துக் கொண்டிருக்க, வீட்டில் நகை காணாமல் போனது தெரியாமல் கோவிலுக்கு கிளம்ப தயாராகுகிறாள். பிறகு அமைச்சர் சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வர சாமுண்டீஸ்வரியும் அவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி எப்படியாவது கோவில் நகையை கண்டுபிடிக்கணும் இல்ல நான் உங்க தாத்தாவோட கௌரவம் போயிடும் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இந்த சமயத்தில் கார்த்திக் கீழே புலிப்பல் ஒன்று இருப்பதை கார்த்திக் கவனிக்கிறான். அதை அனைவரிடமும் காட்டி, இது நம்ம வீட்டில் யாராவது பயன்படுத்துவதாக என்று கேட்க, அனைவரும் இல்லை என்று சொல்கின்றனர். பின் கார்த்திக் யோசித்துப்பார்க்கையில் இதை சமையல்காரன் ஒருவன் போட்டுக் கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது. உடனே மயில்வாகனத்திடம், இந்த புலி பல்லை நான் சமையகாரன் ஒருவரிடம் பார்த்தேன் என்று சொல்ல, இருவரும் சேர்ந்து தேடுகின்றனர்.

வசமாக மாட்டிய விருமன்: ஒரு கட்டத்தில் அந்த சமையல்காரனை பிடித்து அடித்து விசாரிக்கையில் இதெல்லாம் விருமன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துவேலின் திட்டம் என்பது தெரிய வருகிறது. பின் நகைகள் அனைத்தும், விருமன் வீட்டில் இருப்பதாக சொல்ல, கார்த்திக் நகையை எடுப்பதற்காக வீட்டிற்கு செல்கிறான். வீட்டில் பல இடத்தில் நகையை தேடியும் நகை இல்லாததால், என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்க, அப்போது, கடைசியாக வீட்டின் தோட்டத்தில் ஒரு இடத்தில் நகைகள் புதைக்கப்பட்டிருப்பது அறிந்து கார்த்திக் அதை மீட்டெடுக்கிறான்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X