தீபா செய்த பரிகாரம்.. ரம்யாவால் உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரியா, கேமரா மேனுக்கு போன் செய்து ஒழுங்கா அந்த மெமரிகார்டை என்கிட்ட கொடுத்துவிடு இல்லனா அவ்வளவுதான் என்று மிரட்டுகிறாள். மறுபக்கம், அருண், ஆனந்த் சுரேஷ் வீட்டிற்கு வர, பயந்து போன கேமரா மேன் தப்பித்துஓடுவிடுகிறான்.
மறுபக்கம் ஆசிரமத்திற்கு தீபாவும் ரம்யாவும் வர, ஒருவன் வாங்க வாங்க சாமியார் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்காரு. இந்த சாமியாரை நினைத்த உடனே எல்லாம் பார்க்க முடியாது, யாரை பார்க்க வேண்டும் என்று சாமியார் தான், முடிவு பண்ணுவார், இன்னைக்கு அவர் உங்களை பார்த்த அழைத்தது பெரிய விஷயம் என்று சொல்லி உள்ளே அழைத்து செல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இதையடுத்து இன்றைய எபிசோடில், சாமியார் உங்க பிரச்சனை சரியாகணும்னா காலையில் இருந்து மாலை வரை ஓடும் தண்ணீரில் மிதந்தபடி பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். இதைகேட்டதும் பயந்து போன தீபா, எனக்கு நீச்சல் தெரியாது, மிதக்கவும்தெரியாது என்று சொல்கிறாள். வேற வழியில்ல இதை செய்தே ஆகவேண்டும் என்று போலிசாமியார் சொல்ல, ரம்யா சாமி, நீங்க இவ்வளவு கஷ்டமானதை செய்ய சொல்றீங்கே என்கிறார்.
இதுல என்ன பயம் இருக்கு, ஒரு பீப்பாயில் உட்கார வைத்து தண்ணீரில் மிதக்க விடுவோம். காலையில் இருந்து சூரிய அஸ்தமனம் வரைக்கும் நம்பிக்கையான ஒருவரிடம் பீப்பாயில் கட்டிய கயிறை கொடுத்து விடுவோம்.. இந்த பரிகாரத்தை செய்யலனா நான் சொல்ற மாதிரி தான் நடக்கும் சொல்ல பதறிப்போன தீபா, நீங்க சொன்ன மாதிரியே செய்கிறேன் என்கிறார். இதையடுத்து, வேகமாக பாய்ந்து வரும் தண்ணீரில் தீபா பீப்பாய்குள் இருக்க, கரையில் அந்த கயிற்றை ரம்யா பிடித்துக்கொண்டு நிற்கிறாள். சரியான நேரமா பார்த்து இந்த கயிற்றை விட்டுவிட்டால், தீபா கதை முடிந்துவிடும். அப்புறம் கார்த்திக் எனக்குத்தான் என மனதிற்குள் திட்டம் போடுகிறாள்.
இங்கே மருத்துவமனையில் தீபா இல்லாததால், கார்த்திக் மீனாட்சியிடம் தீபா எங்கே என்று கேட்க, தீபா அத்தை சரியாக வேண்டும் என்பதற்காக ஒரு சாமியாரை பார்த்து பரிகாரம் செய்ய போய் இருக்கா, ஆனால், அந்த சாமியார் யார், எங்க போகிறேன் என்று தீபா எதுவும் சொல்லவில்லை என்று சொல்ல,டென்ஷனான கார்த்திக், தீபாவிற்கு போன் செய்கிறான். ஆனால், தீபாவின் போன் ரம்யாவிடம் இருப்பதால், கார்த்திக், தீபாவை தேட ஆரம்பித்துவிட்டான் என்று தெரிந்து கொள்கிறாள். அவன் தேடி வருவதற்குள் தீபா கதையை முடித்துவிட வேண்டும் என்று சரியான நேரத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ரம்யா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











