பீரோவில் கட்டுக்கட்டா பணம்.. ஐஸ்வர்யா போட்ட பிளான்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், சாமியார் உங்க பிரச்சனை சரியாகணும்னா காலையில் இருந்து மாலை வரை ஓடும் தண்ணீரில் பீப்பாய்க்குள் இருக்க வேண்டும், அந்த பீப்பாயை மந்திரம் செய்த கயிறால் கட்டுவேன், அந்த கயிற்றை கரையில் இருக்கும் ஒருவர் பரிகாரம் முடியும் வரை பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இதைகேட்டதும் பயந்து போன தீபா, எனக்கு நீச்சல் தெரியாது, மிதக்கவும் தெரியாது என்று சொல்கிறாள். வேற வழியில்ல இதை செய்தே ஆகவேண்டும் என்று போலி சாமியார் சொல்ல, ரம்யா கோவப்படுவது போல அந்த போலிசாமியாரிடம் சத்தம் போடுகிறாள். நீ எல்லாம் சாமியாரா, என் பிரண்ட் சாகுறதுக்கு பரிகாரம் செய்ய சொல்ற, இது நமக்கு சரியா வராது வா தீபா போகலாம் என்று சொல்வது போல நாடகமாடுகிறாள் ரம்யா. இந்த பரிகாரத்தை நான் சொல்ற மாதிரி செய்யவில்லை என்றால், நிச்சயம் ஆபத்து வரும் என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா வீட்டில் உடம்பு சரியில்லாமல் படுத்துக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் அவளை கூப்பிட்டுக்கொண்ட இருக்கிறார். இதை கண்டுகொள்ளாதபடி ஐஸ்வர்யா, அப்படியே படுத்து இருக்கிறாள். இதனால், கடுப்பான அருணாச்சலம், ஐஸ்வர்யாவின் ரூமுக்குள் வந்து நான் கூப்பிட்டு கொண்டே இருக்கேன், நீ இப்படி படுத்து இருக்க, அங்க அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா... நீ ஹாயா, வீட்ல தூங்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறார்.

கட்டுக்கட்டா நகை: ஐஸ்வர்யா அத்தைக்காக வேண்டிக்கிட்டு அலகு குத்திய விஷயத்தை சொல்ல அருணாச்சலம் இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல என்று மனம் இறங்குகிறார், ஐஸ்வர்யா என்ன விஷயம் என்று கேட்க அருணாச்சலம் பீரோவில் இருந்து பணம் எடுக்கணும் என்று சொல்வதோடு நீ ரெஸ்ட் எடு, நானே எடுத்துக்கிறேன் என்று சொல்கிறார். பணம் எடுக்க வேண்டும் என்று சொன்னதும், நானே எடுத்து தருகிறேன் என்று சாவியை வாங்கி போய் பீரோவை திறக்கிறாள்.

திட்டம் போடும் ஐஸ்வர்யா: பீரோ முழுவதும் நகையும் பணமுமாக இருப்பதை பார்த்து வாயை பிளக்கிறாள். தனது அம்மாவுக்கு வீடியோ கால் செய்து, அம்மா பீரோவில் எவ்வளவு நகை பணம் இருக்கு பாருங்க என்று காட்டுகிறாள். அதைப்பார்த்த ராஜேஷ்வரி, இதை மொத்தத்தையும் ஆட்டைய போட்டுடலாம் நான் கிளம்பி வரேன் என்று சொல்ல ஐஸ்வர்யா, இப்போ எதுவும் வேண்டாம், இங்கே நிலைமை சரியில்ல. சந்தேகம் வராத மாதிரி, யாருக்கும் தெரியாமல் இந்த வேலையை செய்யணும் அதுக்கு ஐடியா சொல்லு என்று கேட்க ராஜேஸ்வரி ஒரு ஐடியா சொல்கிறாள்.

பிறகு ஐஸ்வர்யா பணத்தை கொண்டு போய் அருணாச்சலத்திடம் கொடுக்க அவர் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு சாவியை மறந்து சென்று விடுகிறார். இந்த நேரம் பார்த்து மீனாட்சி அங்கு வந்து சாவியை கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X