சந்திரகலாவின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய கார்த்திக்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்று சன்டே ஸ்பெஷலாக ஒரு மணிநேரம் ஒளிபரப்பானது. அதில், ஒரு பக்கம் சாமுண்டீஸ்வரியின் திருமண கொண்டாட்டம் நடந்து கொண்டு, இருக்க மறுபக்கம் கலச பூஜை நடக்கிறது. இதில் இரண்டிலும் கார்த்திக் கலந்து கொள்ள வேண்டும் என்கிற சூழ்நிலை வருகிறது. இதை வைத்து கார்த்திகை மாட்டிவிட்டுவிடலாம் என சந்திரகலா திட்டம் போடுகிறாள். நீயே சாமுண்டீஸ்வரி கிட்ட போயி எல்லா உண்மையும் சொல்லிடு என்று மிரட்டுகிறாள். இதனால், கார்த்திக் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருக்கிறான்.

மறுபக்கம், சுயநினைவு திரும்பிய மகேஷ் ஆட்டோவில் வந்து கொண்டிருக்க அப்போது சாமுண்டீஸ்வரிக்கும் ராஜராஜனுக்கும் கல்யாண நாள் கொண்டாட்டம் நடப்பது அறிய வருகிறது. இதையடுத்து, மகேஷ், மண்டபத்திற்கு வருகிறான். யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழையும் மகேஷ், ரேவதி வாயைப் பற்றி தனியாக அழைத்துச் சென்று அவளிடம் பேச, இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதில், மகேஷ் மயங்கி விழுகிறான். மறுபக்கம் ஊரில் கலச பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க எல்லோரும் பரமேஸ்வரி பாட்டியிடம் உங்க பேரன் எங்கே என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அப்போது, கார்த்திக்கு ஃபோன் போடுகிறாள், கவலைப்படாதீங்க பாட்டி, நான் சரியான நேரத்திற்கு வருவேன் என்கிறான். பிறகு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் திட்டம் போட்டு வெளியே வர சந்திரகலா, கார்த்தியை சிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறாள்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: திருமணத்திற்கு மாப்பிள்ளை தயார் செய்து அழைத்து வருகிறோம் என்று சொல்லி விட்டு,ரூமுக்குள் ராஜராஜன், கார்த்திக், மயில்வாகனம் இருக்கின்றனர். இந்த நேரத்தில் கார்த்திக் அங்கிருந்து தப்பித்து பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து பூஜையில் கலந்து கொள்கிறேன். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விருமன் அதை வீடியோவாக எடுத்து சாமுண்டீஸ்வரியிடம் காட்ட திட்டம் போட்டு வீடியோ ஆட்களிடம் சொல்லி வீடியோ எடுக்க சொல்கிறான். இதை தெரிந்து கொண்ட கார்த்திக், அங்கு இருக்கும் அனைவரிடமும் சொல்லி, வீடியோ எடுத்தால் தெய்வ குத்தமாகிவிடும் என்கின்றனர். இதனால், யாராலும் வீடியோ எடுக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த விஷயத்தை விருமன், சந்திரகலாவிடம் சொல்கிறான்.

சவால் விட்ட கார்த்திக்: இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த சந்திரகலா, ராஜசேகரன் அறைக்கு வந்து கார்த்திக் எங்கே என்று விசாரிக்க, மாப்பிள்ளை பாத்ரூமில் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். இதனால் அறையில் கார்த்திக் இல்லை என்பதை தெரிந்து கொண்ட சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் உன் மாப்பிள்ளை உன்னை ஏமாற்றிவிட்டு, கலச பூஜையில் கலந்து கொண்டான் என்று சொல்கிறாள். அவன் மண்டபத்தில் இல்லை, உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான் என்று, ராஜசேகரன் அறைக்கு அழைத்து வருகிறாள். சாமுண்டீஸ்வரி அறையின் கதவை தட்டும் நேரம் பார்த்து, பின்பக்கமாக உள்ளே நுழையும் கார்த்திக் சந்திரகலாவின் திட்டத்தை தவிடு பொடியாக்குகிறான். கார்த்திக் இருப்பதை பார்த்து சந்திரகலா அதிர்ச்சி அடைய, சாமுண்டீஸ்வரி இதுக்கு மேல மாப்பிள்ளை பத்தி ஏதாவது சொன்னே அவ்வளவு தான் என எச்சரிக்கை செய்கிறாள். அதன் பிறகு கார்த்திக், சந்திரகலாவிடம் உங்களால் என்னை சிக்க வைக்க முடியாது என சவால் விடுகிறான். சிவனாண்டி விருமனுக்கு ஃபோன் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.‌

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X