மாஸாக களத்தில் இறங்கிய கார்த்திக்.. வசமாக சிக்கிய ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமி உயிரைக் காப்பாற்ற சாமியார் சொன்ன பரிகாரத்தை செய்யாமல் தீபா வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கிறாள். அத்தை நான் உங்களை சாகவிடமாட்டேன், நிச்சயம் சாமியார் சொன்ன பரிகாரத்தை செய்வேன் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறாள். அதைப்பார்க்கும் மீனாட்சி, தீபா என்ன ஆச்ச ஏன், ஏதோ ஒரு மாதிரி இருக்க, ஏதோ புலம்பிக்கிட்டே இருக்கியே என்று சொல்ல தீபா ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறாள்.
மருத்துவமனையில் அபிராமிக்கு ஆப்ரேஷன் முடிந்து மருத்துவர் வெளியே வர, கார்த்திக் அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்க எதுவும் சொல்ல முடியாது, வெயிட் பண்ணலாம் என்று சொல்ல, அப்போது கார்த்திக் உடைந்து அழுகிறான். இதைப்பார்த்த தீபா, எல்லாத்துக்கும் நான் தான் காரணம், நான் அந்த பரிகாரத்தை செய்தே ஆகணும், அதை செய்யாமல் வந்ததால் தான், இப்படி ஆகிவிட்டது என்று புலம்புகிறாள். இதையடுத்து இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ரியாவின் ஓவர் ஆட்டம்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கேமரா மேனுக்கு போன் செய்யும் ரியா, ஒழுங்கா அந்த வீடியோவை என்கிட்ட கொடுத்துவிடு, இல்லனா உன் குடும்பத்தையே நாசமாக்கிவிடுவேன் என்று சொல்ல, பயந்து போன கேமரா மேன் சரி உங்களிடமே தரேன் என்று சொல்ல, ம்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும், நான் வளசரவாக்கம் ஈபி க்கு வரேன் அங்கே வந்து வீடியோவை வாங்கிக்கிறேன். ஒழுங்கா வீடியோவை கொடுத்துவிட்டு, குடும்பத்தோடு வேலையை பாரு என்று மிரட்டுகிறாள் ரியா.
களத்தில் குதித்த கார்த்திக்: இதையடுத்து, கேமிரா மேனுக்கு போன் செய்யும் கார்த்திக், அந்த வீடியோவை கேட்க, சார் அந்த வீடியோவை தரவில்லை என்றால், என் குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று ரியா மிரட்டுறாங்க, நான் எப்படி உங்களுக்கு தருவது என்று சொல்கிறான். உங்க குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாது, எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க என்னை நம்பி, என் குடும்பத்திற்காக அந்த வீடியோவை என்னிடம் கொடுங்க என்று கார்த்திக் கேட்டதும். சரி சார், நான் உங்களுக்கு தருகிறேன். ரியா என்னிடம் வீடியோவை வாங்க வளசரவாக்கம் வருவதாக சொல்லி இருக்கா, நான் போய் அவளோடு பேசிக்கொண்டு இருக்கிறேன் அதற்குள் நீங்க வந்துவிடுங்கள், அப்போ தான் ரியா வசமா மாட்டுவா என்கிறார்.
வசமாக சிக்கிய ஐஸ்வர்யா: இதையடுத்து, ரியா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு கேமரா மேனிடம் வீடியோவை வாங்க வருகின்றனர். ஏதாவது தப்பு நடந்தால் நாம மாட்டிக்கக்கூடாது என்று திட்டம் போட்ட ரியா, ஐஸ்வர்யாவை அனுப்பி நான் தான் ரியா என்று சொல்லி, கேமரா மேனிடமிருந்து வீடியோவை வாங்கவர சொல்கிறாள். ரியாவின் திட்டம் எதுவும் தெரியாத ஐஸ்வர்யா, கேமரா மேனிடம் சென்று நான் தான் ரியா என்று சொல்லி வீடியோவை கேட்க, கேமரா மேன் தயாராக வைத்து இருந்த கயிறை எடுத்து அவளை கட்டிப்போட்டு விடுகிறான். இதை தூரத்தில் இருந்த பார்த்த ரியா, நாம ஒரு பிளான் போட்டா இவன் ஒரு பிளான் போடுகிறானே என்று அந்த இடத்தில் இருந்து ஓடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











