கார்த்தியின் மடியில் உயிர் விட்ட அபிராமி.. ரேவதிக்கு தெரிய வந்த உண்மை.. கார்த்திகை தீபம்!

சென்னை: கும்பாபிஷேகத்தை நிறுத்த திட்டம் போட்ட சந்திரகலா, கார்த்திக்கின் அம்மா அபிராமியை கடத்தி வைத்து, பூஜை நடக்கும் நேரத்தில் அவளை அழைத்து வர திட்டம் போடுகிறாள். இது தெரியாத, கார்த்திக், ராஜராஜன் ஆகியோர் யாக பூஜையில் அமர்ந்திருக்க இங்கே, அப்போது சந்திரகலா, ரவுடிககுக்கு போன் செய்து அபிராமியை சரியான நேரத்துக்கு கோவிலுக்கு அழைத்து வர சொல்கிறாள். இதை ஒட்டு கேட்டு விடும் அபிராமி குடோனில் இருந்து தப்பி வருகிறாள். அபிராமி தப்பி ஓடிவிட்ட விஷயம் சந்திரகலாவிற்கு தெரிய அவளை விட்டுடாதீங்க, எப்படியாவது பிடித்து இங்கு அழைத்து வாங்க என ரௌடிகளுக்கு ஆர்டர் போடுகிறார்.

மற்றொரு பக்கம், கோவிலில் ரேவதி மைதிலியிடம் என்னுடைய கணவரை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கார்த்தியை கூப்பிட போக, மைதிலிக்கு ரேவதியின் புருஷன் கார்த்திக் தான் என்பது தெரிந்து அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரௌடிகளிடம் இருந்து அபிராமி தப்பி ஓடி வர ஒரு இடத்தில் எதிரில் வந்து காரின் மீது மோது கீழே விழுகிறாள். கார்த்திக் தூரத்தில் இருந்து பார்த்து ஓடி வந்து அம்மாவை தனது மடியில் சாய்த்து ஏம்மா இப்படி பண்றீங்க என்று கண் கலங்குகிறான். அப்போது, அபிராமி, நீ ரேவதியுடன் நல்லா வாழனும் என்று சொல்லி சத்தியம் வாங்கிக்கொண்டு கார்த்தியின் மடியில் உயிரை விட கார்த்திக் கண்ணீரில் தவிக்கிறான். பிறகு கோவிலில் அபிராமி இறந்து விட்டதால் திருவிழா இல்லை என்று சொல்லி திருவிழாவை நிறுத்துகின்றனர். சாமுண்டீஸ்வரி ஊருக்கு கிளம்பலாம் என்று சொல்வதை கேட்டு ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். இறந்தது பாட்டியோட மகள், அப்போவோட தங்கை அப்படி இருக்கும் போது சாவிற்கு வரமாட்டேன் என்று சொல்வது சரியில்லை. சாவிற்கு கூடவா இப்படி நடந்துப்பீங்க, அங்கே அப்பா கவலையில் இருக்கிறார். இந்த நேரத்தில் நீங்க அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்ற சொல்கிறாள்.

இறுதிச்சடங்கிற்கு வந்த ரேவதி: இதை கேட்டு கடுப்பான சாமுண்டீஸ்வரி அந்த குடும்பத்தில் யாரு செத்தா எனக்கு என்ன, என் குடும்பத்துல ஒரே நேரத்துல ரெண்டு பேரு இறந்தாங்க, அப்போ நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன். என்னால், அந்த குடும்பத்தோட ஒட்டி உறவாட முடியாது என்று சொல்கிறாள். அப்போது ரேவதி, நீங்க போகவில்லை என்றால் பரவாயில்லை என்ன போகக்கூடாது என்று நீங்க எப்படி சொல்ல முடியும், நான் கண்டிப்பா அங்கே போவேன் என்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி நீ வேண்டுமென்றால் போ, என்று சொல்கிறாள். இதையடுத்து ரேவதி இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கிளம்புகிறாள்

தெரியவந்த உண்மை: அதன்பின், சந்திரகலா அபிராமியின் இறுதி சடங்கில் அவளது மகன் கார்த்திக் நிச்சயம் வருவான். அவன் தான் அபிராமியின் மகன் என்பதை நான் இன்று நிரூபிக்கிறேன். என்னுடன் வா என, சந்திரகலா சாமுண்டீஸ்வரியை இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருகிறாள். அதே நேரம், இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு வரும் ரேவதி, அபிராமிக்கு கார்த்திக் கொல்லி வைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வந்து அவர் மறைத்து வைத்திருந்த போட்டோவை எடுத்து பார்க்க, அதில் அபிராமி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X