ஜூஸில் கலந்தது என்ன? கார்த்திக் எடுக்கும் முடிவு? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஜூஸை குடித்ததும் சைகோ போல நடந்து கொண்டதால், சந்தேகப்படும் கார்த்திக் ஜூஸில் என்ன இருந்தது என்று தெரிந்து கொள்வதற்காக லேப்பில் டெஸ்டிற்கு கொடுக்கிறான்.

இதையடுத்து, கம்பெனியில், ரம்யா, கார்த்திக்கை கூப்பிட்டு கம்பெனி விஷயமா பெங்களூர் போறேன், நீங்களுடம் கூட வாங்க என்று கூப்பிட கார்த்திக்கும் ஓகே சொல்ல பி.ஏவிடம் இரண்டு பேருக்கும் டிக்கெட் போட சொல்கிறாள். இந்த விஷயம் அறிந்த மாணிக்கம் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கோ.. அப்புறம் இந்த கம்பெனியோட அடுத்த ஓனர் நீ தான் என்று சொல்ல கார்த்திக் தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், அபிராமியும் மீனாட்சியும் தீபாவுக்கு அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் கோவிலுக்கு வந்து அவளுக்கு பதிலாக விளக்கு போட்டு ஏலம் விடப்படும் அம்மன் புடவையை வாங்க கோவிலுக்கு வந்துள்ளனர். தீபாவுக்காக பரிகாரத்தை நான் செய்யலாமா என்று அபிராமி கேட்க அவளுடைய புருஷன் கார்த்திக் தான் செய்யணும் என்று சொல்கிறார்.

ஜூஸில் கலந்தது என்ன: மறுபக்கம் கார்த்திக் தீபா குடித்த ஜூஸை லேப் டெஸ்ட்க்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் அதன் ரிசல்ட் குறித்து விசாரிக்க வந்திருக்க அதில் ஒரு மாத்திரை கலந்து இருந்ததும், அதை சாப்பிட்டால் கொஞ்ச நேரத்திற்கு சைக்கோ போல் நடந்து கொள்வார்கள் என்பதையும் சொல்ல கார்த்திக் யார் இந்த வேலையை செய்திருப்பா என்று என்று யோசித்து குழப்பம் அடைகிறான். இதையெல்லாம் ரம்யா மறைந்திருந்து பார்க்கிறாள், பிறகு கார்த்திக் அங்கிருந்து சென்றதும் ரிசப்ஷனில் இருப்பவருக்கு பணத்தை கொடுத்து நடந்தவற்றை தெரிந்து கொள்ள கார்த்திக் போனை அங்கேயே மறந்து வைத்துவிட்டு சென்றிருக்க அவன் திருப்பி வர ரம்யா மீண்டும் மறைந்து கொள்கிறாள்.

அடுத்து நடக்கப்போது என்ன: அதன் பிறகு அபிராமி கோவிலில் மீனாட்சியிடம் ரம்யாவோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, நீ அவங்க வீட்டு அட்ரஸ் கேளு, நாம அவரை வீட்டில் போய் பார்த்திட்டு வந்துடலாம் என்று சொல்ல மீனாட்சியும் அட்ரஸ் கேட்டு விட்டு ரம்யா வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் ரம்யா கார்த்திக்கிடம் இருந்து மோதிரத்தை வாங்கியவனை வீட்டிற்கு அழைத்து பணத்தை கொடுத்து கார்த்திக்கிற்கு கொடுத்த மோதிரத்தை திரும்ப வாங்கி கொள்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X