இந்த தாலி உன் கழுத்தில் இருக்கக்கூடாது.. வில்லத்தனத்தை காட்டிய மகேஷ்.. கார்த்திகை தீபம்!
சென்னை: மருத்துவமனையில் இருந்து சுயநினைவு திரும்பி மகேஷ், மண்டபத்திற்கு வந்து ரேவதியிடம் வந்து நல்லவன் போல நடிக்கிறான். உடனே ரேவதி உன்னை பற்றி எல்லாமும் எனக்கு தெரிந்து விட்டது மரியாதையாக இந்த இடத்தை விட்டுபோ என்று சொல்கிறான். ஓ... என்னை பற்றி எல்லாம் உனக்கு தெரிந்து விட்டதா, அப்போ உன்னை சும்மாவிடக்கூடாது, உன்னை அடையாமல் விட்டுவிட்டேன் என்று ரேவதியிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். இதில் ஏற்பட்ட தகராறில் ரேவதி மயக்கம் அடைந்து விடுகிறாள். அந்த நேரம் பார்த்து சாமுண்டீஸ்வரி, விளக்கை தேடி அந்த அறைக்குள் வர, மகேஷ், ரேவதியை கட்டிலுக்கு அடியில் மறைத்துவைத்துவிட்டு, ஒளிந்து கொள்கிறான்.
மறுபக்கம் கலச பூஜைக்கு சென்று கொண்டிருந்த கார்த்திக்கிற்கு மருத்துவனையில் இருந்து மகேஷ் தப்பிட்டதாக ஃபோன் வருகிறது. இதனால், ரேவதிக்கு பிரச்சனை வரும் என தெரிந்து கொண்ட கார்த்திக் வேகவேகமாக மண்டபத்திற்கு வருகிறான். இதையடுத்து, சந்திரகலா, ராஜசேகரன் அறைக்கு வந்து கார்த்திக் எங்கே என்று விசாரிக்க, மாப்பிள்ளை பாத்ரூமில் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். இதனால் அறையில் கார்த்திக் இல்லை என்பதை தெரிந்து கொண்ட சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் உன் மாப்பிள்ளை உன்னை ஏமாற்றிவிட்டு, கலச பூஜையில் கலந்து கொண்டான் என்று சொல்கிறாள். அவன் மண்டபத்தில் இல்லை, உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான் என்று, ராஜசேகரன் அறைக்கு அழைத்து வருகிறாள். சாமுண்டீஸ்வரி அறையின் கதவை தட்டும் நேரம் பார்த்து, பின்பக்கமாக உள்ளே நுழையும் கார்த்திக் சந்திரகலாவின் திட்டத்தை தவிடு பொடியாக்குகிறான்.

கார்த்திகை தீபம் சீரியல்: கார்த்திக் இருப்பதை பார்த்த சந்திரகலா, விருமனுக்கு ஃபோன் போட்டு, கார்த்திக் அங்கே வருவதற்கு வாய்பே இல்லை. இதனால், கோவில் இருப்பவர்களிடம், கார்த்திக் இங்கே இருக்கிறான் என சொல்லி அழைத்து வாங்க, இந்த இடத்தில் வைத்து அவனை நன்றாக மாட்டி விடலாம் என திட்டம் போடுகிறாள். அதே போல, மண்டபத்திற்கு இளையராஜா வர, அவனைப்பார்த்த சாமுண்டீஸ்வரி, கலசபூஜைக்கு போகாம இங்கே என்ன பண்றீங்க என்று கேட்க, அங்க இருந்தா அத்தை பொண்ணை பார்க்க முடியுமா அதான் இங்கே வந்தேன் என்கிறான். அதைத் தொடர்ந்து மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள்.
வழுக்கி விழுந்த சந்திரகலா: இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வர பரமேஸ்வரி பாட்டி வரும் சமயத்தில் சந்திரகலா இங்கே இருந்தால், பிரச்சனை ஆகிவிடும் என்பதை தெரிந்த கொண்ட கார்த்திக், இவள் இருக்கக் கூடாது என மயில்வாகனத்திடம் ஒரு திட்டத்தை சொல்கிறான். அதன்படி வாழைப்பழம் தோலை கீழே போட, அதில் கால்வைத்த, சந்திரகலா வழுக்கி விழுகிறாள். பிறகு மயில்வாகனம் சந்திரகலாவை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று எக்ஸ்-ரே, ஸ்கேனிங் என எல்லாவற்றையும் எடுக்க வைத்து நேரத்தை தாமதப்படுத்துகிறான். இங்கே மண்டபத்தில் இளையராஜாவும் இங்கும் அங்குமாக நடந்தபடி இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











