கார்த்திக்கிடம் மாட்டிய ரம்யா.. அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமியும் மீனாட்சியும் தீபாவுக்கு அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் வேதனை அடைந்து கோவிலுக்கு வந்து அவளுக்கு பதிலாக விளக்கு போட்டு ஏலம் விடப்படும் அம்மன் புடவையை வாங்க கோவிலுக்கு வருகிறார்கள். மேலும், தீபாவுக்காக பரிகாரத்தை நான் செய்யலாமா என்று அபிராமி பூசாரியிடம் கேட்க, அவளுடைய புருஷன் கார்த்திக் தான் செய்யணும் என்று சொல்கிறார்.

அதன் பிறகு அபிராமி மீனாட்சியிடம் ரம்யாவோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, நீ அவங்க வீட்டு அட்ரஸ் கேளு, நாம அவரை வீட்டில் போய் பார்த்திட்டு வந்துடலாம் என்று சொல்ல மீனாட்சியும் அட்ரஸ் கேட்டு விட்டு ரம்யா வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபாவை கொல்ல வந்த ரவுடி கோவில் அருகே போன் பேசி கொண்டே நடந்து வர எதிரில் மீனாட்சியும் போன் பேசியபடி நடந்து வர இருவரும் மோதி கொள்கின்றனர். இதையடுத்து, மீனாட்சிக்கும் ரவுடிக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் போலீசை கூப்பிட்டு அவனை பிடித்து கொடுத்துவிடுகிறாள். அதன் பிறகு அந்த ரவுடி ரம்யாவுக்கு போன் செய்து தான் கைதான விஷயத்தை சொல்ல அவள் அவனை வெளியே எடுக்க ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள்.

கார்த்திக்கிடம் சிக்கிய ரம்யா: மறுபக்கம் கார்த்திக் ஜூஸில் மருந்து கலந்தது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று கம்பளைண்ட் கொடுக்க ஸ்டேஷனுக்கு வருகிறான். அப்போது கார்த்திக்கின் நண்பரான இன்ஸ்பெக்டர் உங்க அண்ணி கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டானு கைது பண்ணி இருக்கோம், அவனை விசாரிக்கும் போது அவன் கிட்ட கத்தி இருந்தது, தீபாவை குத்த வந்தது இவனா பாரு என்று காட்ட கார்த்திக் இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறான். அதன் பிறகு ரம்யாவும் ஸ்டேஷனுக்கு வர கார்திக்கிடம் சிக்கி கொள்கிறாள். எதுக்கு இங்க வந்தீங்க என்று விசாரிக்க ரம்யா ஒருத்தன் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பதாக கம்பளைண்ட் கொடுக்க வந்ததாக சொல்கிறாள். பிறகு இன்ஸ்பெக்டர் இவனா பாருங்க என்று காட்ட ரம்யாவும் ஆமாம் என்று தலையாட்டி அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.

அம்மன் புடவையை மறைத்த ரம்யா: அதை தொடர்ந்து அபிராமியும் மீனாட்சியும் வீட்டிற்கு வர ரம்யா அவர்களை வரவேற்கிறாள். பிறகு அப்பாவிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்க அவர் கார்த்திக்கிற்கு முதல் முதலாக என் பொண்ணை தான் பொண்ணு பார்க்க வந்தீங்க என்று சொல்ல அபிராமி ஷாக் ஆகிறாள். இதையடுத்து ரம்யா, அப்பா சொன்னதை மனசுல வச்சிக்காதீங்க, கார்த்திக்.. தீபாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் சொல்கிறாள். அபிராமியும் மீனாட்சியும் கோவிலில் இருந்து கொண்டு வந்த சாமி புடவையை அங்கேயே மறந்து வைத்து விட்டு கிளம்பி விட ரம்யா அந்த புடவையை எடுத்து வைத்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X