கார்த்திகை விட்டு பிரியும் ரேவதி.. வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன.. கார்த்திகை தீபம்!

சென்னை: கலசபூஜைக்காக ஊரில் இருந்த அனைவரும் மண்டபத்திற்கு வருவதாக சொல்லி பரமேஸ்வரி பாட்டி ஃபோன் செய்கிறாள். அப்போது, கார்த்திக் நீங்க பயப்படாமல் வாங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறான். இதையடுத்து, பரமேஸ்வரி பாட்டி வரும் சமயத்தில் சந்திரகலா இங்கே இருந்தால், பிரச்சனை ஆகிவிடும் என்பதை தெரிந்த கொண்ட கார்த்திக், சந்திரகலா இங்கே இருக்கக் கூடாது என மயில்வாகனத்திடம் ஒரு திட்டத்தை சொல்கிறான். அதன்படி வாழைப்பழம் தோலை கீழே போட, அதில் கால்வைத்த, சந்திரகலா வழுக்கி விழுகிறாள். பிறகு மயில்வாகனம் சந்திரகலாவை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று எக்ஸ்-ரே, ஸ்கேனிங் என எல்லாவற்றையும் எடுக்க வைத்து நேரத்தை தாமதப்படுத்துகிறான். இங்கே மண்டபத்தில் இளையராஜாவும் இங்கும் அங்குமாக நடந்தபடி இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்குள் நுழைகிறாள். இதையடுத்து என்ன ஆனாது என்று பார்க்கலாம்.

ஊர் ஆட்கள் கலசத்துடன் வந்ததைப்பார்த்து கடுப்பான சாமுண்டீஸ்வரி, எதுக்கு இங்கே வந்தீங்க என்று கேட்க, என் பேரன் இங்கே இருக்கிறான். பூஜை செய்வதற்கு நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்கான இங்கே வந்தோம் என்று சொல்கிறான் பரமேஸ்வரி பாட்டி. உடனே, சாமுண்டீஸ்வரி, இளையராஜாவை பார்த்து உன்னை யார் இங்கே அழைத்தது. தேவையே இல்லாமல் இங்கே வந்து ஏன் பிரச்சனை செய்ற என்று கேட்டுவிட்டு, சீக்கிரம் பூஜையை முடிங்கள் என்று சொல்ல, அய்யர் பூஜையை ஆரம்பிக்கும் நேரம், கார்த்திக் ஏற்பாடு செய்துவைத்திருந்த ஆள், புகையை போட்டுவிட, அந்த நேரத்தில் கலசத்திற்கு கார்த்திக் பூஜை செய்து விடுகிறான். இதையடுத்து, மண்டபத்தில் வைத்து கலச பூஜை நடந்து முடிகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சந்திரகலா, மண்டபத்திற்கு வர, திட்டம் தோல்வியடைந்ததை நினைத்து வருத்தம் அடைகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், கார்த்திக்கை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என சந்திரக்கலா, விருமன், சிவனான்டி என அனைவரும் யோசிக்கின்றனர். ரேவதி, ஆஸ்திரேலியாவிற்கு கிளைம்பிக்கொண்டு இருக்கிறாள். அப்போது அவளின் பிளைட் டிக்கெட் கீழே விழுகிறது. இதை சந்திரகலா பார்த்துவிட, அதற்குள் மயில்வாகனம் அந்த டிக்கெட்டை எடுத்து ரேவதியிடம் கொடுத்துவிடுகிறான். இதனால், சந்திரகலாவிற்கு அது என்ன டிக்கெட் என்கிற சந்தேகம் வருகிறது. பிறகு கார்த்தியிடம் ரேவதி ஆஸ்திரேலியா பற்றி விசாரித்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு இருக்கும் மயில்வாகனம், கார்த்திக் ரொம்ப நல்லவன், அவன் வேண்டும் என்று உன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கு. இப்படி ஒரு கணவன் கிடைக்க நீ தான் கொடுத்துவைத்து இருக்க வேண்டும் என்று ரேவதிக்கு அறிவுரை சொல்கிறார்.

கார்த்திக்கை பிரியும் ரேவதி: அடுத்த நாள் கார்த்திக், ரேவதி ஆஸ்திரேலியா கிளம்ப சாமுண்டீஸ்வரி உங்களுடன் நானும் வருகிறேன் என்று சொல்ல, கார்த்திக் நானே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன், பெங்களூருக்கு ஒரு கல்யாணத்துக்கு போறாங்க என்று பொய் சொல்லி ரேவதியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான். ரேவதி கார்த்தியுடன் ஏர்போர்ட்டுக்கு வரும் சமயத்தில் சந்திரகலா ஃபோன் செய்து, நீ ஆஸ்திரேலியா போறது எனக்கு தெரியும் இப்போ இருக்க சூழ்நிலையில் இதுதான் சரியான முடிவு என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள். ரேவதி கார்த்தியிடம் காரை நிறுத்த சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X