மீனாட்சியிடம் சிக்கப்போகும் ரம்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமியும் மீனாட்சியும் வீட்டிற்கு வர ரம்யா அவர்களை வரவேற்கிறாள். பிறகு அப்பாவிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்க அவர் கார்த்திக்கிற்கு முதல் முதலாக என் பொண்ணை தான் பொண்ணு பார்க்க வந்தீங்க என்று சொல்ல அபிராமி ஷாக் ஆகிறாள். இதையடுத்து ரம்யா, அப்பா சொன்னதை மனசுல வச்சிக்காதீங்க, கார்த்திக்.. தீபாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் சொல்கிறாள்.
அதே போல, கார்த்திக்கை வேலை விஷயமாக பெங்களுருக்கு அழைத்து சென்று விட்டு, அந்த நேரத்தில் தீபாவை கொல்ல திட்டம் போடுகிறாள். இதற்காக ஏற்பாடு செய்த ரௌடி போலீசில் மாட்டிக்கொண்டதால், அடுத்து என்ன செய்வது என்று பிளான் போடுகிறாள் ரம்யா. அதே நேரம் ஜூஸில் விஷ மாத்திரை கலந்ததை தெரிந்து கொண்ட கார்த்திக். இது யார் வேலையாக இருக்கும், யார் தீபாவை கொல்ல நினைக்கிறார்கள் என்று யோசனை செய்து கொண்டு இருக்கிறான். இப்படியான நிலையில், இன்று என்ன நடக்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், மீனாட்சி ரம்யா ரூமுக்குள் செல்ல அங்கு ஆங்கரில் ஒரு சட்டை தொங்குவதை பார்த்து இது அவரோட சட்டையா? என்று கேட்கிறாள், அது கார்த்திக் சட்டை என்று தெரிந்துவிடுமோ என ரம்யா பதற்றப்பட்டு, ஏதோ சொல்லி சமாளிக்கிறாள். உன் காதல் கதையை தீபா என்னிடம் சொல்லி இருக்கா என்று கலாய்க்கிறாள் மீனாட்சி. அதன் பிறகு ரம்யா இவர்களுக்கு தெரியாமல் கோவிலில் இருந்து வாங்கி வந்த புடவையை எடுத்து விடுகிறாள், அந்த புடவை இருக்கும் பையிலேயே மீனாட்சியின் பர்ஸ்ஸும் இருக்கிறது. இதுதெரியாமல் ரம்யா அந்த பையை எடுத்து வைத்துக்கொள்கிறாள்.
மன்னிப்பு கேட்கும் கார்த்திக்: இதனை தொடர்ந்து அபிராமியும் மீனாட்சியும் புடவையை மறந்து கிளம்பி விடுகின்றனர், கார்த்திக் கோவிலில் தீபாவுக்காக பரிகார பூஜையை செய்து முடித்து விட்டு வருகிறான். அப்போது தனது மோதிரத்தை கழட்டி கொடுத்தவரை பார்க்க அவர் மோதிரத்தை ரம்யா திரும்பி வாங்கி, அதன் பிறகு பணத்தை கொடுத்தாங்க என்று சொல்ல கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து மோதிரத்தை கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்கிறான். ரம்யா உங்க மேல எனக்கு கோபம் இல்ல, அந்த மோதிரம் உங்க கிட்ட இருக்கனும்னு நினைச்சேன் அவ்வளவு தான் என்று சொல்கிறாள். நாளைக்கு மோதிரத்தை உங்க கிட்ட திருப்பி கொடுக்கிறேன் என்று சொல்லி போனை வைக்கிறாள்.
வசமாக சிக்கும் ரம்யா: இதையடுத்து, மறுபக்கம், ரம்யா வீட்டில் இருந்து வெளியேவந்த மீனாட்சி பர்சை தேடும் போது, புடவையை மறந்து, ரம்யா வீட்டில் வைத்துவிட்டது நினைவுக்கு வர, மீனாட்சி அபிராமியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீனாட்சி மட்டும் தனியாக ரம்யா வீட்டிற்கு திரும்பி வருகிறாள், இங்கே வீட்டில் ரம்யா கார்த்திக்கை நினைத்து கொண்டு, கோவிலில் இருந்து கொண்டு வந்த புடவையை கட்டி பார்த்து கொண்டிருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











