கார்த்திக்கிற்காக கையை உடைத்துக்கொண்ட ரேவதி.. மனதிற்குள் வந்த காதல்.. கார்த்திகை தீபம்!
சென்னை: ஆஸ்திரேலியா கிளம்பும் ரேவதி, கார்த்திக்காக ஒரு கிப்ட் வாங்கி கொடுக்கிறாள். அதன் பிறகு இருவரும் காரில் வந்து கொண்டிருக்க திடீரென கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு ஆட்டோவில் ஏர்போர்ட் வருகின்றனர். அப்போது, ரேவதி, மாயா சொன்ன பொய்யை நம்பி நான், உங்களை தவறாக புரிந்து கொண்டேன். இதனால் தான் ஆஸ்திரேலியா போகலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், அதன் பிறகு தான் நீ நல்லவன் என்று தெரியவந்தது. இதனால், இப்போ எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல என்று சொல்கிறாள். அப்போது கார்த்திக், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்க என்று சொல்லி, ரேவதியை ஏர்போர்ட்டில் ட்ராப் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறான். இன்னொரு பக்கம் அபிராமி பழனிக்கு பாதயாத்திரை வந்து கார்த்திக் ரேவதி ஒன்னு ஒற்றுமையா இருக்கணும் என்று பூஜை செய்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மயில்வாகனம் வீட்டில் சோகமாக இருக்க, அப்போது, ரோகினி என்ன விஷயம் என்ற விசாரிக்கிறாள். அப்போது மயில்வாகனம், ரேவதியும் கார்த்தியும் சந்தோஷமாக வாழவில்லை. ரேவதிக்கு கார்த்திகை பிடிக்கவே இல்லை. இதனால் அவனை விட்டு பிரிந்து செல்வதற்காக அவள் ஆஸ்திரேலியா செல்ல திட்டம் போட்டு இருக்கிறாள். இப்போ கூட அவள் பெங்களுர் போக வில்லை, ஆஸ்திரேலியாத்தான் செல்கிறபாள். எத்தனை முறை சொல்லியும் அவள் கேட்கவே இல்லை என்று சொல்லி வருத்தப்படுகிறான். இதையடுத்து ரோகினி, ரேவதிக்கு ஃபோன் செய்து, ஏன் ரேவதி இப்படி ஒரு முடிவை எடுத்த, மாமா சொல்லி தான் எனக்கு எல்லா விஷயமும் தெரியுது. கார்த்திக் நல்லவர் தான். அவர் அம்மாவின் விருப்பப்படி தான் உன் கழுத்தில் தாலியை கட்டினார். நம்ம குடும்பத்திற்கு வந்த அனைத்து பிரச்சனைகளையும் அவர் எப்படி சமாளித்து இருக்கிறார் என்று சொல்கிறாள். ஆனால் ரேவதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து கார்த்திற்கு அவசரமாக வரும்படி ஃபோன் வர, கார்த்திக் பதறியடித்துக் கொண்டு வருகிறான். அப்போது ரேவதி, கையில் கட்டுடன் இருக்கிறாள். இதைப்பார்த்து என்ன ஆனது என்று கேட்க, ரேவதி விஷயத்தை சொல்கிறாள். இதனால் விமானத்தில் பயணிக்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள், மூன்று மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் என்று ரேவதி சொல்ல, கார்த்திக் ரேவதியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். ரேவதி கையில் கட்டுடன் இருப்பதை பார்த்த ரோகினி, என்ன நடந்தது என்று விசாரிக்க அப்போது ரேவதி விஷயத்தை சொல்கிறாள். உடனே ரோகிணி இதுவும் நல்லது தான். நீ கார்த்திகை புரிந்து கொள்ள வேண்டும், கார்த்திக் உண்மையில் நல்லவர் என்று சொல்கிறாள்.
இதையடுத்து, கார்த்திக் மருத்துவர் கொடுத்த மாத்திரையை ரேவதிக்கு எடுத்து கொடுக்கிறான். அப்போது, ரேவதி மனதிற்குள், உங்களை விட்டு எனக்கு போக மனசு வரவில்லை. அதற்காகத்தான் என் கையை நானே உடைத்துக்கொண்டேன், இனிமேல் நான் உங்களை விட்டு பிரியவே மாட்டேன் என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











