கார்த்தியின் உயிருக்கு ஆபத்து.. ரம்யா போடும் மாஸ்டர் பிளான்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் வேலை விஷயமாக ரம்யாவுடன் பெங்களூர் செல்வதாக சொல்ல, கோபப்பட்டு அவனிடம் சண்டை போடுகிறாள் தீபா. பொசசிவ்வில் கோபப்படுகிறாள் என்பதை புரிந்து கொள்கிறான் கார்த்திக். மேலும், அபிராமி, தீபாவிற்கு உடல்நிலை சரியில்லை, இந்த நேரத்தில் நீ ஊருக்கு போவது சரியில்லை என்று சொல்கிறாள்.
ரம்யா, பெங்களூருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டு இருக்க, டிரைவரையும் வேண்டாம் என்று சொல்கிறாள். கார்த்தியே காரை ஓட்டுவான் எனவும் கணக்கு போட அங்கு வந்த கார்த்தி என்ன தப்பா நினைச்சுக்காதீங்க.. என்னால உங்க கூட பெங்களூரு வர முடியாது என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியில்ல, இந்த நேரத்தில் நான் அவக்கூட இருக்கணும் என்று சொல்ல ரம்யா வேறு வழியில்லை என்று ஓகே சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

தீபாவை சர்ப்ரைஸ் பண்ண கார்த்திக்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், தீபா அண்ணி மைதிலியிடம் கோபமாக பேசி வெளியே அனுப்ப. கார்த்திக் ரூமுக்குள் வந்து நிற்கிறான். அதை தீபா அது பிரம்மை என நினைத்து எனக்கு உங்கள் ஞாபகமாகவே இருக்கு என்று பேச நான் தான் உங்க முன்னாடி வந்து நிற்கிறேன் என்று கார்த்திக் சர்ப்ரைஸ் கொடுக்கிறான். உடனே தீபா எனக்காக நீங்க பெங்களூர் போலயா அப்படின்னு கோவிலுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல கார்த்திக் அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான். இருவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட ரம்யா இதை அனைத்தையும் வெளியில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறாள்.
புருஷன் உயிருக்கு ஆபத்து: அதன் பிறகு இவர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்ததும் கார்த்திக்கு தெரிந்த ஒருவர் அவரைப் பார்த்து பேச தீபா பழக்கடை அருகே வந்து நிற்க அப்போது யாரோ ஒருவன் ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுக்கிறான். தீபா அதைப் பிரித்துப் பார்க்க உன் புருஷன் உயிருக்கு ஆபத்து என்று எழுதி இருக்க அதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அந்த நேரம் பார்த்து இளநீர் கடைக்காரர் கார்த்தியை பார்த்து கையில் கத்தியுடன் தீபா பதறி போய் கார்த்திகை பிடித்து தள்ளிவிட்டு உங்களை கொல்ல வரான் என்று சொல்கிறாள். நான் இளநீர் கடைக்காரன் இளநீர் வெட்ட தான் வந்தேன் என்று சொல்ல கார்த்திக் அவரிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைக்கிறான்.
அதிர்ச்சியில் தீபா: தீபா உங்க உயிருக்கு ஆபத்துன்னு ஒரு லெட்டரை ஒருத்தன் வந்து கொடுத்துட்டு போனான் என்று சொல்லி அந்த பேப்பரை கொடுக்க அதில் எதுவும் இல்லாமல் இருக்க தீபா அதிர்ச்சி அடைகிறாள். பிறகு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல அபிராமி, தீபா ஏதோ அப்செட்டாகவே இருக்கா என்று சொல்கிறாள். இருப்பினும் கார்த்திக் அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்னுடைய நண்பனிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் எனக்கு தெரிஞ்ச பாரன் சீக் டிபார்ட்மெண்ட் பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன் கிட்ட கொடுத்து பார்க்கலாம் என்று சொல்லி கொடுக்க அதை பரிசோதனை செய்து பார்த்ததில், அது மேஜிக் பேனாவால் எழுதி இருப்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











