டாட்டூவால் சிக்கிய ரம்யா.. சைலண்ட்டாக கார்த்திக் வைத்த செக்மேட்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக்கும் தீபாவும் கோவிலில் இருந்து வெளியே வர, தீபா பழக்கடை அருகே வந்து நிற்க அப்போது யாரோ ஒருவன் ஒரு லெட்டரை கொண்டு வந்து கொடுக்கிறான். அதில், உன் புருஷன் உயிருக்கு ஆபத்து என்று எழுதி இருக்க அதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து, தீபா கார்த்திக்கிடம்,உங்க உயிருக்கு ஆபத்துன்னு ஒரு லெட்டரை ஒருத்தன் வந்து கொடுத்துட்டு போனான் என்று சொல்லி அந்த பேப்பரை கொடுக்க அதில் எதுவும் இல்லாமல் வெறும் பெப்பராக இருக்கிறது.

உடனே தீபா, இதில் எழுதி இருந்ததை நான் பார்த்தேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இதனால், சந்தேகம் அடைந்த கார்த்திக் அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்னுடைய நண்பனிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் எனக்கு தெரிஞ்ச பாரன் சீக் டிபார்ட்மெண்ட் பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன் கிட்ட கொடுத்து பார்க்கலாம் என்று சொல்லி கொடுக்க அதை பரிசோதனை செய்து பார்த்ததில், அது மேஜிக் பேனாவால் எழுதி இருப்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Television zee tamil Karthigai Deepam Serial

ஐஸ்வர்யா மீது சந்தேகப்படும் கார்த்திக்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக், ஐஸ்வர்யா மீது சந்தேகப்பட்டு அவளை பார்க்க வர ஐஸ்வர்யா மற்றும் ரியா இருவரும் சேர்ந்து தீபாவுக்கு நடக்கும் விஷயங்கள் பற்றி ஒரு ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கார்த்திக் சர்வர் ஒருவரை கூப்பிட்டு ரகசியமாக ஏதோ பேசி பணத்தை கொடுத்து அனுப்புகிறான்.

அந்த சர்வர் ஐஸ்வர்யாவிடம் இந்த பேப்பரை கொடுத்து பேனாவையும் கொடுத்து ஹோட்டல் குறித்து ரேட்டிங் கொடுக்க சொல்கிறான். ஐஸ்வர்யாவும் எழுதிக் கொடுக்க சர்வர் என்ன மேடம் எதுவுமே இல்ல என்று கேட்க ஐஸ்வர்யா எழுதினேனே என்று சொல்கிறாள்.

மேஜிக் பேனா: பிறகு அந்த சர்வர் சாரி மேடம் நான் தான் மேஜிக் பேனாவை கொடுத்துட்டு இருக்கேன் என்று சொன்னதும் ஐஸ்வர்யா அதை ஆச்சரியமாக வாங்கி பார்க்க கார்த்தி இந்த லெட்டரை கொடுத்தது ஐஸ்வர்யா இல்லை என்பதை உறுதி செய்கிறான். பிறகு வீட்டுக்கு வர தீபா கை வலியில் தவிக்க கார்த்திக் அவளுக்கு கையை பிடித்து விடுகிறான்.

ரம்யா கையில் இருந்த டாட்டூ: அடுத்த நாள் ஆபீஸ் வர ரம்யா மோதிரத்தை கொடுக்க அப்போது கார்த்திக் கையில் இருக்கும் டாட்டூவை பார்க்கிறான். மீனாட்சி அனுப்பிய போட்டோவிலும் இதே டாட்டூ இருப்பது கார்த்திக்கின் ஞாபத்திற்கு வருகிறது. இதையடுத்து வீட்டுக்கு வந்த கார்த்திக், தீபாவிடம் உங்க பிரண்டை வர சொல்லுங்க ஒருநாள் நேர்ல பார்க்கலாம் என்று சொல்ல தீபாவும் ரம்யாவுக்கு போன் செய்து வர சொல்கிறாள். கார்த்திக் வர சொன்னதாக ரம்யாவிற்கு தெரிய வந்ததும் அவள் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X