வேலைக்காரிக்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா? மூக்கு உடைந்து நின்ற சந்திரகலா.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில், இரண்டு மணி நேரம் சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. சந்திரகலா, கார்த்திக் தான் ராஜசேதுபதியோட பேரன் என்பது மட்டும் சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்து விட்டால், பின் கார்த்திக்கை இந்த வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாள், பின் இந்த வீடு நம்ம கன்ட்ரோலில் வந்துவிடும் என்று திட்டம் போடுகிறாள்.
இதையடுத்து, ராஜசேதுபதி ஊரில் ஒரு பெண்ணை போலியாக சாமியாட வைத்து சாமுண்டீஸ்வரியின் திருமண கொண்டாட்டம் நடக்கும் அதே நாளில் கலச பூஜையை நடத்த வேண்டும், அன்னைக்கு தான் திதி நல்லா இருக்கு என்று சொல்ல வைக்கிறாள். இதனால் அதே தினத்தில் கலச பூஜை நடக்க வேண்டும், அதே போல, திருமண கொண்டாட்டத்திலும் கார்த்திக் இருக்க வேண்டும் என்பதால், அந்த நாளில் கார்த்திக்கை மாட்டி விடலாம் என திட்டம் போடுகிறாள். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: திருமண நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அப்போது சாமுண்டீஸ்வரி, மாப்பிள்ளை கார்த்திக்கிடம் வந்து ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூப்பிடுகிறாள், சந்திரகலா உங்களை ராஜசேதுபதியோட பேரன் என்று பலமுறை சொல்லிக்கிட்டே இருக்கா. பல திட்டங்களை போட்டு என்கிட்ட சொல்கிறாள். ஆனால், அந்த திட்டத்தை எல்லாம் நீங்க முறியடித்துவிட்டீர்கள், சந்திரகலாவிற்கு உங்க மேல, ஏதோ சந்தேகம் இருக்கு. சந்திரகலா சொல்றது பொய்யின்னு நீங்க நிரூபித்தாக வேண்டும். அதாவது, பரமேஸ்வரி ஊர்ல இன்னைக்கு கலச பூஜை நடக்குது அதேபோல, நம்ம வீட்ல திருமண கொண்டாட்டம் நடக்குது. அந்த கலச பூஜையை ராஜசேதுபதியோட பேரன் தான் செய்ய வேண்டுமாம். அங்கு கலச பூஜை நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டாள், யாருக்கும் உங்க மேல சந்தேகம் வராது. இதனால நீங்க எங்கேயாவது போவதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு போங்க என்று சொல்கிறாள் சாமுண்டீஸ்வரி.
சந்திரகலாவின் திட்டம்: இதை கேட்டுக் கொண்டிருந்த சந்திரகல, என்ன டிரைவர் மாப்பிள்ளை. இப்ப எப்படி அங்க போறதுனு யோசிச்சிட்டு இருக்கீங்களா... இன்னைக்கு நீ அந்த கலச பூஜைக்கு போக முடியாது... அப்படி போகனா சாமுண்டீஸ்வரி கிட்ட மாட்டிப்பா, போகவில்லை என்றால், கலச பூஜையும் நின்றுவிடும். இதனால், நீ நிச்சயமா, இன்னைக்கு மாட்டீப்ப, நீயே சாமுண்டீஸ்வரி கிட்ட போயி எல்லா உண்மையும் சொல்லிடு என்று மிரட்டுகிறாள். இதனால், கார்த்திக் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருக்கிறான். அப்போது வெளியில் சிவனான்டி மற்றும் அவனின் சித்தப்பா முத்துப்பாண்டி ஒருவனிடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அவனிடம் முத்துப்பாண்டி, நீ சாமுண்டீஸ்வரி கண்ணில் படவே கூடாது என்கிறான். இதை மாடியில் இருக்கும் கார்த்திக் கேட்டுவிட்டு, முத்துப்பாண்டி அப்படி சொல்ல என்ன காரணம் என யோசித்துக்கொண்டு இருக்கிறான்.
அவமானப்பட்ட சந்திரகலா: மறுபக்கம், திருமண மண்டபத்தில் சாமுண்டீஸ்வரியின் நகை காணாமல் போய்விடுகிறது. அப்போது சந்திரகலா அங்கு வேலை செய்ய ஒரு பெண்ணிடம் நீ தான் கடைசியாக அக்காவின் ரூமுக்கு வந்து போனாய், நீ தான் நகையை எடுத்திருக்க வேண்டும் என பெண்ணை தரகுறைவாக பேசுகிறாள். அப்போது அங்கு வரும் கார்த்திக், அந்தப் பெண் நகை எடுத்ததை நீங்கள் பார்த்தீர்களா... தேவையில்லாமல் அந்தப் பெண் மீது வீண்பழி சுமத்தக்கூடாது என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஒரு முறை அத்தையின் அறையில் நகை இருக்கிறதா என்று பார்க்கலாம் என அனைவரும் சென்று நகையை தேடுகின்றனர். அப்போது, புடவையில் மறைந்திருந்த தங்க நகை வெளியே விழுகிறது.
இதை பார்த்துவிட்டு கார்த்தி, அந்தப் பெண் மீது பழி போட்டு விட்டீர்கள். அதனால் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறான். இதனால், ஆத்திரமடைந்த சந்திரகலா நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்ல, அப்போது, சாமுண்டீஸ்வரி, நீ அந்தப் பெண்ணை தவறான வார்த்தைகளால் திட்டி விட்டாய், இதனால், மாப்பிள்ளை சொல்வது போல மன்னிப்பு கேள் என்று சொல்கிறாள். சந்திரகலா வேறு வழியே இல்லாமல் அந்த பணி பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறாள். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் சந்திரகலா, டேய் கார்த்தி.... நீ அடிக்கடி என்னைஅவமானப்படுத்திக்கிட்டே இருக்க, இதுக்கெல்லாம் சரியான தண்டனை உனக்கு நாளைக்கு காத்துகிட்டு இருக்கு பாருடா என சொல்லிவிட்டு கிளம்புகிறாள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்த செய்தியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











