தீபாவிற்காக சவால் விட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் மருத்துவமனையில் டாக்டர்கள் தர்மலிங்கத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்கின்றனர். கார்த்திக் ஹாஸ்பிடல் பார்மில் கையெழுத்து போட்டு கொடுக்கிறான். மறுபக்கம் கோகிலா தீபாவுக்கு தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்லி அவள் பாடுவதை தடுத்து நிறுத்த திட்டம் போடுகிறாள்.

ஆனால், தீபா எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பாடி முடிக்கிறாள். ரக்சன் பாடியதற்கான பணத்தை செக்காக கொடுக்க தீபா மிகுந்த சந்தோஷத்துடன், அப்பா கிட்ட செக்கை கொடுக்க வேண்டும் என்று கிளம்ப கார்த்திக் அவளை பிக்கப் செய்து அழைத்து செல்கிறான். அப்போது கார்த்திக், தர்மலிங்கம் மருத்துவமனையில் இருக்கும் விஷயத்தை சொல்ல தீபா உடைந்து கதறி அழுகிறாள். கண்ணீருடன் அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்குள் ஓடி வருகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 11th Episode

இன்றைய எபிசோடு: இதையடுத்து இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் இன்று, தீபாவை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக், தர்ம லிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வர காரணம் நம்ம வீடும் தான் என்று சொல்ல எல்லோரும் குழப்பம் அடைகின்றனர். ராஜேஸ்வரி தான் பேப்பரில் தீபா பற்றி தப்பான செய்தியை போட சொன்னது என்று சொல்வது மட்டுமல்லாமல் அவங்க தான் சீர்வரிசை கேட்டு தர்மலிங்க மாமாவை அவமானப்படுத்தினாங்க அதனாலதான் அவர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் சீர் செய்துள்ளார் என்ற உண்மையை உடைக்கிறார்.

zee tamil television Karthigai Deepam serial March 11th Episode

சவால் விடும் கார்த்திக்: இதையெல்லாம் கேட்ட ராஜேஸ்வரி அவர் உடம்பு சரியில்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும் என கேட்பதோடு எதை வச்சு நான் தான் நியூஸ் பேப்பர்ல செய்தி போட சொன்னேன்னு சொல்றீங்க ஆதாரம் இல்லாம பேசாதீங்க என்று கேட்க செய்தி போடச் சொன்னது நீங்க தானே நான் நிரூபித்து காட்டுறேன் என சவால் விடுகிறான். இதையடுத்து கார்த்திக் என்ன செய்யப் போறான் என ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா குழப்பத்தில் இருக்க கார்த்திக் நியூ எடிட்டர் ரவி வீட்டுக்கு வருகிறான். அங்கு வந்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி நீங்க வந்து உண்மையை சொல்லணும் என்று கூப்பிட ரவி எனக்கு எதுவும் பிரச்சனை வராதா என்று பயப்படுகிறான்.

zee tamil television Karthigai Deepam serial March 11th Episode

அடுத்து என்ன: ரவியின் மனைவி நீங்க செய்த தவற நீங்கதான் சரி செய்யணும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று அட்வைஸ் செய்ய அவன் உண்மையை சொல்ல ஒப்புக்கொள்கிறான். எங்க வீட்டில் என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் எல்லோரும் காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

zee tamil television Karthigai Deepam serial March 11th Episode

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X