உண்மையை நிரூபிக்க போராடும் கார்த்திக்.. ராஜேஸ்வரி போடும் திட்டம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், கோபத்துடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் கார்த்திக், தர்ம லிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வர காரணம் நம்ம வீட்டில் இருக்கும் ஆட்கள் தான் என்று சொல்ல அனைவரும் குழப்பம் அடைகின்றனர். ராஜேஸ்வரி தான் பேப்பரில் தீபா பற்றி தப்பான செய்தியை போட சொன்னது என்று சொல்வது மட்டுமல்லாமல் அவங்க தான் சீர்வரிசை கேட்டு தர்மலிங்க மாமாவை அவமானப்படுத்தினாங்க என்கிறார்.

இதையடுத்து, ராஜேஸ்வரி அவர் உடம்பு சரியில்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும், எதை வச்சு நான் தான் நியூஸ் பேப்பர்ல செய்தி போட சொன்னேன்னு சொல்றீங்க ஆதாரம் இல்லாம பேசாதீங்க என்று கேட்க செய்தி போடச் சொன்னது நீங்க தான் என்று நான் நிரூபித்து காட்டுறேன் என சவால் விடுகிறான். இதையடுத்து, நியூஸ் எடிட்டர் ரவியை வீட்டுக்கு வந்து உண்மையை சொல்லும்படி கேட்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 12th Episode

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், நியூஸ் எடிட்டரை கார்த்திக் வீட்டுக்கு அழைத்து வரப்போகிறார் என்பதை தெரிந்து கொண்ட ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி நீ மாட்டிக்க போற மா என்று சொல்கிறாள். உடனே ஒரு திட்டம்போடும் ஐஸ்வர்யா, அவன் கில்லாடினா நான் அவனுக்கு மேல, நான் பண்ண போறதை மட்டும் பாரு என்று சொல்லி விட்டு போனை வைக்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial March 12th Episode

காத்திருக்கும் கார்த்திக்: இதையடுத்து, கார்த்திக் வீட்டில் நியூஸ் எடிட்டருக்காக காத்திருக்க நேரமாகியும் நியூஸ் எடிட்டர் வராத காரணத்தினால் ராஜேஸ்வரி என்ன பா கார்த்திக் எதையோ நிரூபிச்சு காட்டப்போகிறேன் என்று சவால்விட்டுட்டு போன, இப்போ ஒருத்தனையும் காணுமே என்று கேட்டு வம்பிழுக்கிறாள். யார் கிட்ட என்ன பேசுறோம்னு பார்த்து பேசு கார்த்திக் என்று எச்சரிக்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial March 12th Episode

ரிப்போர்ட்டருக்கு என்னாச்சு: இதையடுத்து கார்த்திக் நியூஸ் எடிட்டர் கண்டிப்பா வருவாரு எனக்கு 5 மணி வரைக்கும் டைம் கொடுங்க என்று சொல்லி விட்டு நியூஸ் எடிட்டர் ரவி வீட்டிற்கு கிளம்பி வருகிறான். அவரது மனைவி அவர் காலையிலேயே கிளம்பிட்டாரே, இன்னும் வரலையா என்று கேட்க கார்த்திக் எதையும் சொல்லாமல் நான் பார்த்துக்கறேன் என்று சமாளித்து விட்டு வெளியே வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X