ஒழுக்கம் கெட்ட மாயா.. நர்ஸ் சொன்ன உண்மை.. கல்யாணத்தில் நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: சந்திரகலா சிவனாண்டியிடம் மகேஷ் மாயா உறவு குறித்து சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்து விட்டது என்ற விஷயத்தை சொல்ல சிவனாண்டி, சாமுண்டீஸ்வரியை கடத்தி விடுவதாக சொல்கிறான். அம்மா இல்லாமல் ரேவதி எப்படி கல்யாணம் பண்ணிப்பா என்று கேட்க, நீ தான் ரேவதிக்கிட்ட சொல்லி கல்யாணத்திற்கு சம்மதிக்க சொல்ல வேண்டும். நீ சொன்னா அவ கண்டிப்பா கேட்பாள். அவளை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு என சந்திரகலாவிடம் சொல்கிறான்.

ஒருபக்கம் கார்த்திக், இந்த கல்யாணத்தை நிறுத்தி, நண்பன் நவீனுக்கு ரேவதியை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்து, நவீன் என்னுடைய நண்பன் என ரேவதியிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். அதே நேரம் மல்லிகா டாக்டர் மகேஷ் பற்றி தெரிந்தும் கல்யாணத்தை நிறுத்தாததால், மாயாவிற்கு கருக்கலைப்பு செய்த போது உடன் இருந்த நர்ஸை தேடி செல்கிறான் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக்கிற்கும் ரேவதிக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம் என்று பிளான் போட்டா, இந்த கார்த்திக், ரேவதியை நவீனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறான். இவனை சும்மா விடக்கூடாது என்று திட்டம் போடும் மயில்வாகனம், நவீனின் கவனத்தை துர்கா பக்கம் திருப்ப வேண்டும். அப்படி செய்ததால் தான் கார்த்திக்கிற்கும் ரேவதிக்கும் திருமணம் செய்து வைக்க முடியும் என திட்டமிட்டு கீழே எண்ணெய்யை கொட்டி விட்டு துர்கா மற்றும் நவீனை வேறுவேறு காரணங்களை சொல்லி அழைத்து வருகின்றனர். திட்டமிட்டபடி துர்கா எண்ணெய்யில் கால் வைத்து வழுக்கி விழ நவீன் அவளை தாங்கி பிடிக்கிறான்.

zee tamil Karthigai Deepam

கடத்தலில் நடந்த சொதப்பல்: அடுத்து பரமேஸ்வரி பாட்டி பேரன்கள் அருண் ஆனந்திடம் என் பேரன் கார்த்திக்கின் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால், இந்த மகேஷ் இங்கே இருக்கக்கூடாது என்று சொல்ல, அருண், ஆனந்த் திருவரும் அவனை கடத்த பிளான் போடுகின்றனர். இதை கேட்டுவிட்ட மாயா, மகேஷிடம், கல்யாணம் நடக்கக்கூடாது என்று பாட்டி திட்டம் போட்டு உன்னை கடத்த பிளான் போட்டுக்கொண்டு இருக்கிறாள். நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கல்யாணம் முடிந்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்ற சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து, மகேஷ் ரூமுக்கு வரும் நவீன், ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று சொல்ல, அவனும் பயன்படுத்திக்கொள்ள சொல்கிறாள். இதனால் அருண் ஆனந்த் இருவரும், மஹேஷுக்கு பதிலாக நவீனை கடத்தி விடுகின்றனர்.

zee tamil Karthigai Deepam

ஒழுக்கம் கெட்ட மாயா: மறுபக்கம், கார்த்திக் நர்ஸை தேடி மருத்துவமனைக்கு வர, அந்த நர்ஸ் மருத்துவமனையில் இல்லாததால், வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு செல்கிறான். பின் நர்ஸை பார்த்து உங்களுக்கு மாயா, மகேஷை தெரியுமா, நீங்க தான மாயாவிற்கு கருக்கலைப்பு செய்யும் போது கூட இருந்தீங்க என்று சொல்ல, அந்த நர்ஸ் யோசித்துவிட்டு, ஆமாம், அந்த மாயா ஒழுங்கம் கெட்டவள், மச்சினன் கூட உறவில் இருந்து கர்ப்பம் ஆனாள் என்று சொல்கிறாள். இதைக் கேட்ட கார்த்திக், ஆமாம், அந்த மகேஷ் இப்போ ரேவதி என்ற பெண்ணை கல்யாணம் பண்ணிக்க போகிறான் நீங்க தான் வந்து உண்மையை சொல்லி, இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்ல, அந்த நர்சும் உண்மையை சொல்ல வருவதாக சொல்லி கிளம்பி வருகிறாள்.

பாட்டி முருகன் கோவிலுக்கு சென்று புலம்ப முருகன் கண்முன் தோன்றி என்ன பாட்டி என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? கண்டிப்பா கார்த்திக் ரேவதி கல்யாணம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X