சொத்தை பிரித்து கேட்ட ஐஸ்வர்யா.. கன்னத்தில் விழுந்த அறை.. கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், மருத்துவமனையில் இருந்து தர்மலிங்கம் வீட்டுக்கு வர கார்த்திக் அவரை வீட்டில் பார்த்து, நலம் விசாரிக்கிறான். அந்த நேரம், சேட்டு வீட்டுக்கு வந்து தர்மலிங்கம் இந்த வீட்டை எனக்கு விற்றுவிட்டார். அந்தப் பணத்தை வைத்து தான் தீபாவுக்கு நகை போட்டாரு என்ற உண்மையை உடைக்கிறார். அதோடு தர்மலிங்கம் ஏற்கனவே இந்த வீட்டை காலி பண்ணி இருக்க வேண்டும் இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை அதனால் கொஞ்ச நாள் இருந்துட்டு கூட காலி பண்ணட்டும் ஆனா சீக்கிரம் காலி பண்ணிடுங்க என்கிறார்.

இதைக்கேட்டு டென்ஷனான கார்த்திக், இந்த வீட்டை எவ்வளவுக்கு விற்றாரோ அந்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் வீட்டை திருப்பிக் கொடுத்துடுங்க என்று கேட்கிறான். அதற்கு சேட்டு முடியாது என்று சொல்லிவிட, வீட்டை காலி செய்துவிட்டு, அனைவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். இப்படியாக இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 16th Episode

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், கார்த்திக் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மகளுக்கு நகை வாங்குவதற்காக வீட்டை சேட்டு கிட்ட விற்றுவிட்டார். இதனால்,சேட் வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிட்டாரு இவங்களுடைய இந்த நிலைமைக்கு நாமும் ஒரு காரணம் அதனால் தான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறான். உடனே ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து தர்மலிங்கம் குடும்பத்தை கண்டபடி பேசி அவமானப்படுத்துகின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial March 16th Episode

சொத்தை பிரிச்சிடுங்க: எனக்கு தெரிஞ்சு கார்த்திக் தான் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி இருப்பான், நகை வாங்கி கொடுக்கவும் அவன் தான் பணம் கொடுத்திருப்பான். இவங்க எதுவும் செலவு பண்ணி இருக்க மாட்டாங்க என்று பேசுகின்றனர். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, கார்த்திக் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி? சொத்தை மூணா பிரிச்சு கொடுத்துடுங்க என்று சொல்ல அபிராமி உச்சகட்ட டென்ஷன் ஆகி ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார். இப்படியான நிலையில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X