ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், தீபாவிற்கு நகை வாங்குவதற்காக இவர், வீட்டை சேட்டு கிட்ட விற்றுவிட்டார். இதனால்,சேட் வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிட்டாரு இவங்களுடைய இந்த நிலைமைக்கு நாமும் ஒரு காரணம் அதனால் தான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறான். உடனே ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து தர்மலிங்கம் குடும்பத்தை கண்டபடி பேசி அவமானப்படுத்துகின்றனர்.

எனக்கு தெரிஞ்சு கார்த்திக் தான் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி இருப்பான், நகை வாங்கி கொடுக்கவும் அவன் தான் பணம் கொடுத்திருப்பான். இவங்க எதுவும் செலவு பண்ணி இருக்க மாட்டாங்க என்று பேசுகின்றனர். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, கார்த்திக் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி? சொத்த மூணா பிரிச்சு கொடுத்துடுங்க என்று சொல்ல அபிராமி உச்சகட்ட டென்ஷன் ஆகி ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 18th Episode

ரிஜிஸ்டர் மேரேஜ்: அதே போல மறுபக்கம், ரியா ஆனந்திடம் ரிஜிஸ்டர் ஆபீஸ் கல்யாணம் என்று சொல்கிறாள். அப்போது அமைதியாக இருந்த ஆனந்திடம் உங்களுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்க இல்ல நாளைக்கு மீனாட்சிக்கும் எனக்கும் கல்யாண நாள் அதனால என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டா என்று சொல்ல ரியா ஆனந்தை மூளை சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial March 18th Episode

சாப்பாட்டுக்கே வழியில்ல: இதையடுத்து, மீனாட்சி மற்றும் தீபா என இருவரும் கிச்சனில் சமைத்துக கொண்டிருக்க, ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் தர்மலிங்கத்தின் குடும்பத்தை அவமானப்படுத்த திட்டம் போட்டு, சமையல் அறைக்கு வருகின்றனர். உங்க அப்பா அம்மாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க, ஒன்னும் இல்லாத குடும்பம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் இங்கு வந்து இருக்கீங்க என்று அவமானப்படுத்தி பேச தீபா தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial March 18th Episode

கடுப்பான மீனாட்சி: ஜானகி மற்றும் மைதிலி இதை கேட்டு வருத்தப்படுகின்றனர். ராஜேஸ்வரியின் பேச்சை கேட்டு கடுப்பான மீனாட்சி, சாக்கடையில் கல் எறிஞ்சா அது நம்ம மேல தான் மீண்டும் வரும்,நீ வா என்று தீபாவை அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X