ரெஜிஸ்டர் ஆபிஸில் ஆனந்த்.. கல்யாணத்தை நிறுத்த தீபா செய்ய போவது என்ன?கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றை எபிசோடில், ரியா, ஆனந்தை திருமணம் செய்ய ரிஜிஸ்டர் ஆபீசுக்கு அழைக்கிறாள். அப்போது அமைதியாக இருந்த ஆனந்திடம் உங்களுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்டு ரியா ஆனந்தை மூளை சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு சம்பதிக்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில்,கார்த்திக் ஒரு கிரீட்டிங் கார்டில் மன்னித்துவிட்டேன் என்று எழுதி கொடுக்கிறான். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த தீபா, என்னை மன்னித்துவிட்டீங்களா சார் என்று கேட்க, காதலிப்பங்களை சார்னு தான் கூப்பிடுவீங்களா? கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு என் மேல காதல் இருந்திருக்கு அதை மீனாட்சி என்னிடம் சொல்லிவிட்டாங்க, இனி மேல் என்னை சாருனு கூப்பிடாதீங்க என்கிறான்.

zee tamil television Karthigai Deepam serial March 19th Episode

சார்னு கூப்பிடாதீங்க: கல்யாணத்திற்கு முன்னாடியே பிடிக்கும் ஆனால் சொல்ல முடியல என்று சொல்ல, அதான் இப்போ எல்லாம் தெரிஞ்சிடுச்சில இனிமேல் என்னை இனிமே நீங்க சார் எல்லாம் கூப்பிடாதீங்க வேற மாதிரி மாமா வாங்க போங்கன்னு கூப்பிடுங்க என்று சொல்லி இல்ல வேண்டாம் அது ரொம்ப பழசா இருக்கு, மீனாட்சி அவங்க கணவரை வாங்க போங்கன்னு கூப்பிடுறாங்க நீங்களும் அதே மாதிரி சொல்லுங்க என்று சொல்ல தீபா வெட்கப்பட, கார்த்திக் என்ன லவ் பண்ணீங்க தானே என்று கேட்க, ஓடி சென்று கார்த்தியை கட்டிப்பிடித்துக்கொள்கிறாள்.

மீனாட்சியை ஏமாற்றும் ஆனந்த்: இதைத் தொடர்ந்து தீபா விளக்கு போடுவதற்காக கோவிலுக்கு கிளம்பிச் செல்ல அபிராமிக்கு பதில் அவளுடன் மீனாட்சி கூட வருகிறாள். என்னக்கா எப்பவும் அத்தை தான வருவாங்க இன்னைக்கு நீங்க வந்து இருக்கீங்க என்று கேட்க இன்னைக்கு எனக்கு கல்யாண நாள் அதனால விளக்கு போட நானும் வந்தேன் என்று சொல்கிறாள். கோவிலில் இருவரும் விளக்கு போட்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது ரியா மற்றும் ஆனந்த் ஒன்றாக வருவதை பார்க்கிறார் தீபா.

தீபா என்ன செய்வாள்: மீனாட்சி, இருவரையும் ஒன்றாக பார்த்தால் வருத்தப்படுவாள் என, இதைப் பார்த்து விடாமல் தடுத்து எனக்கு ஒருவரை சந்திக்க வேண்டிய வேலை இருக்கு நான் பாத்துட்டு வந்துடுறேன் என சொல்லி மீனாட்சியை வீட்டுக்கு அனுப்புகிறாள். அதன் பிறகு தீபா அவர்களை பின்தொடர்ந்து செல்ல இருவரும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு செல்வதை பார்த்து தீபா கார்த்திக்கு போன் போட போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தீபா இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த போவது எப்படி என்பது தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X