தீபா கழுத்தில் ஏறிய தாலி .. ஆனந்தால் ஏமாந்த ரியா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தாலி மாற்றுவதற்காக கார்த்தி தீபாவை கூட்டிக்காண்டு கடைக்கு வருகிறான். அப்போது, தீபா கார்த்தியையே தாலியை செலெக்ட் செய்ய சொல்ல அவன் நீங்க தான் போட்டுக்க போறீங்க, உங்களுக்கு பிடித்த மாதிரியே எடுங்க என்று சொல்ல தீபாவும் தாலியை செலக்ட் செய்கிறாள்.
மறுபக்கம் ரியா தனது வீட்டில் ஆனந்திடம் தாலியை காட்டி இதை தான் நீங்க என் கழுத்தில் நாளைக்கு கட்ட போறீங்க என்று பேசி கொண்டிருக்க மீனாட்சி போன் செய்ய ஆனந்த் கடுப்பாகிறான். அதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: இதையடுத்து கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், கார்த்திக் தீபா கழுத்தில் புது தாலியை காட்டுகிறான், பிறகு அபிராமி, அருணாச்சலம், ஜானகி என அனைவருமே இருவலையும் ஆசிர்வாதம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து மீனாட்சி மெட்டி எடுத்து கொடுத்து தீபா காலில் போட்டு விட சொல்ல கார்த்தியும் போட்டு விடுகிறான். அப்படியே மறுபக்கம் ரியா ஆனந்துக்காக கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறாள்.
குங்குமம் வைக்கும் சடங்கு: இங்கே இது ஒரு பெரிய செலிபிரேஷன் ஆகிடுச்சு தீபாவை பாட சொல்லலாமே என்று கேட்க அபிராமி எதுக்கு அதெல்லாம் என்று கேட்க அருணாச்சலம் தீபா பாடகி தானே, அப்போ பாடினா என்ன என்று பாட வைக்கிறார். இதனையடுத்து மாங்கல்யத்தில் குங்குமம் வைக்கும் சடங்கு நடக்க ஐஸ்வர்யாவுக்கு அருண் குங்குமம் வைத்து விடுகிறான்.

மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா: இதனையடுத்து ஆனந்த் ரியாவிடம் பேசி கொண்டிருக்க மற்றவர்கள் எல்லாரும் ஆபிஸ் கால் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனந்த் ரொம்ப நேரமாக பேசி கொண்டிருக்க அபிராமி அவனை திட்டி மீனாட்சிக்கு குங்குமம் வைக்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்க என்று சொல்ல, அவனும் மீனாட்சிக்கு குங்குமம் வைத்து விட, மீனாட்சி ஆனந்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள்.
ஏமாந்த ரியா: இங்கே ரியா ஆனந்துக்காக காத்திருக்க அய்யர் லேட் ஆகுது, எனக்கு வேறொரு கல்யாணம் இருக்கு என்று கிளம்பி செல்ல ரியா ஏமாற்றமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











