மீனாட்சிக்கு துரோகம் செய்த ஆனந்த்..ரியா கழுத்தில் கட்டிய தாலி..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், கோவிலுக்கு விளக்கு போட போன தீபா, ரியா மற்றும் ஆனந்த் கையில் மாலையுடன் ஜோடியாக போவதைப் பார்த்துவிடுகிறாள். இதையடுத்து அவர்களை பின் தொடர்ந்து ஆட்டோவில் செல்கிறாள் அவர்கள் ரிஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு செல்வதை பார்த்து பதறும் தீபா. கார்த்திக்கிற்கு போன் போட கார்த்திக் மீட்டிங்கில் இருந்ததால் எடுக்கவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் தீபா, திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், மீட்டிங் முடிந்து போனை பார்க்கும் கார்த்திக், தீபாவிற்கு போன் செய்து என்ன விஷயம், ஏன் இத்தனை போன் பண்ணி இருக்கீங்க என்று கேட்க, தீபா, ரியாவும் ஆனந்தும் கல்யாணம் பண்ணிக்க ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து இருக்காங்க, நான் கோவில் போகும் போது அவங்களைப் பார்த்து இவர்களை பின் தொடர்ந்து வந்தேன். இப்போ எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று சொல்கிறாள். இதைக்கேட்டு பதறிப்போன கார்த்திக், நீங்க கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துங்கள் நான் கிளம்பி வரேன் என்று சொல்விட்டு அங்கிருந்து வேகமாக காரில் கிளம்புகிறான்.

zee tamil television Karthigai Deepam serial March 20th Episode

அவ தான் எனக்கு வாழ்க்கை கெடுத்தா: இதையடுத்து. தீபா, ஆனந்திடம் சென்று மனைவி இருக்கும் போது நீங்க இரண்டாவது திருமணம் செய்வது தப்பு, மீனாட்சி மற்றும் குழந்தைகளை நினைத்து பாருங்க அவங்க உங்களைத்தான் நம்பி இருக்காங்க என்று சொல்ல, ஆனந்த் இது என் வாழ்க்கை இதை எப்படி வாழனும்னு எனக்கு தெரியும் என் விஷயத்தில் தலையிடாதே தீபா என்கிறார். இதையடுத்து, ரியாவிடம் பேசும் தீபா, நீயும் ஒரு பெண்தானே மீனாட்சி வாழ்க்கையை ஏன் கெடுக்குற என்று கேட்க, நான் மீனாட்சி வாழ்க்கையை கெடுக்கல அவ தான் என் வாழ்க்கையை கெடுத்தா என்று சொல்லி தீபாவை கடுமையாக திட்டி விடுகிறான்.

zee tamil television Karthigai Deepam serial March 20th Episode

கோவிலை தேடும் ரியா: இதையடுத்து, தீபா, ரெஜிஸ்டரை தனியாக சந்தித்து ஆனந்துக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை சொல்ல, கடுப்பான ரெஜிஸ்டர் உங்களுக்கு என்னால கல்யாணம் பண்ணி வைக்க முடியாது என சொல்லி ஆபீஸில் வேலை செய்யும் ஆபீஸ் பாயை திட்டி அவர்களை வெளியே அனுப்பு என்று சொல்லி விடுகிறான். இதனால், அந்த இடத்தை விட்டு கிளம்பிய ஆனந்த் மற்றும் ரியா இங்க முடியாதுனா எங்களால கல்யாணம் பண்ண முடியாதா? எப்படியாவது கல்யாணம் பண்ணி காட்டுகிறேன் என்று ரியா மனதிற்குள் சொல்லிக் கொண்டு, ஆனந்தை அழைத்துக் கொண்டு, அருகில் என்ன கோவில் இருக்கு என்று இருவரும் சேர்ந்து கோவில் கோவிலாக தேடுகின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial March 20th Episode

தாலி கட்டிய ஆனந்த்: கடைசியாக ஒரு கோவிலில் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி கட்டிவிட அதைப்பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். தாலி கட்டும் நேரம் ஓடி வந்த கார்த்திக் அண்ணா அண்ணா என்று கத்தியும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் என் வாழ்க்கை இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X