மகேஷ் தப்பானவன்.. அண்ணியுடன் கள்ளத்தொடர்பு.. அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: சாமுண்டீஸ்வரியை கடத்திவைத்துவிட்டு, ரேவதியின் கல்யாணத்தை நடத்திவிடலாம் என சந்திரகலா நினைத்த நிலையில், ரேவதியோ அம்மா இல்லாமல் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு இருக்க, கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி எப்படியோ தப்பித்து மண்டபத்திற்கு வந்து விடுகிறாள். ரேவதிக்கும் மகேசுக்கும் கல்யாணம் இன்னும் நடக்கவில்லை என்பதை தெரிந்து கொண்ட சாமுண்டீஸ்வரி சந்தோஷமடைகிறாள்.

அய்யரிடம் அடுத்த முகூர்த்தம் எப்போது என்று கேட்க இன்னும் 2 மணி நேரத்தில் முகூர்த்தம் இருப்பதாக சொல்கிறார். அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை நடத்தலாமா என்று அவரிடம் கேட்க, நல்லபடியாக நடத்தலாம் என்று ஐய்யர் சொல்ல, அப்போது கல்யாணத்தை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து வைத்து கொள்ளலாம் என்று சொல்கிறாள். அப்போது, அங்கு அமர்ந்து இருக்கும் பரமேஸ்வரியை பார்த்து, இந்த கல்யாணம் நின்னா, உன் பேரனுக்கு என் மகளை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று காத்துக்கிட்டு இருக்கியா... அதுதான் நடக்காது, என் மகளுக்கு டிரைவர் ராஜா தான் மாப்பிள்ளை என்று மனதிற்குள் சொல்லிவிட்டு சிரிக்கிறாள்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், மாயா, சந்திரகலா டீம் ஒரு பக்கம் இப்போ என்ன செய்வது என ஆலோசித்து கொண்டு இருக்க, மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி, ராஜராஜன் மற்றும் மயில் வாகனம் ஆகியோர் அடுத்து என்ன செய்வது என பேசுகின்றனர். மற்றொரு பக்கம், கார்த்திக் டாக்டர் மல்லிகாவை பார்க்க வீட்டிற்கு வர, வீட்டு வேலைக்காரி டாக்டர் பெங்களூர் போய் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள். கார்த்திக் வெளியே போனதும் மறைந்து இருந்த மல்லிகா டாக்டர், சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து, கார்த்திக் வீட்டிற்கு வந்த விஷயத்தை சொல்கிறாள். உனக்கு நல்ல பையன் டிரைவராக கிடைத்து இருக்கான் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி டிரைவர் மட்டுமில்ல என் வீட்டு மாப்பிள்ளையும் அவன் தான் என்று சொல்ல மல்லிகா, நல்ல முடிவு தான் எடுத்து இருக்க என்று சந்தோசப்படுகிறாள்.

துர்காவை காதலிக்கும் நவீன்: அருண் மற்றும் ஆனந்தால் கடத்தப்பட்ட நவீன் மண்டபத்திற்கு வந்ததைப்பார்த்த மாயா, சந்திரகலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் நவீனை வைத்து ரேவதியின் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று முடிவெடுக்கிறான். ஆனால் நவீன், துர்காவை தான் எனக்கு பிடித்திருப்பதாக சொல்ல, அதைக்கேட்டு கார்த்திக் ஷாக் ஆகிறான், இதனால் நவீன் ரேவதியை திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை உருவாகிறது. கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்ல முடிவெடுக்கிறான்.

zee tamil Karthigai Deepam

அண்ணியுடன் கள்ள உறவு: அதற்குள் மாயா ரேவதியிடம் சென்று அந்த டிரைவர் உங்க அம்மா கிட்ட போய் எனக்கும் மகேஷ்க்கும் தப்பான தொடர்பு இருப்பதாக சொல்ல போவதாக சொல்கிறான் என்று சொல்ல, ரேவதி கார்த்திகை பின் தொடர்ந்து செல்கிறாள். அப்போது கார்த்தி சாமுண்டீஸ்வரியை பார்த்து, மகேஷ் நல்லவன் இல்லை, அவனுக்கும் அண்ணி மாயாவிற்கும் தொடர்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இருவரும் பல முறை கருகலைப்பு செய்து இருக்கிறார்கள், இதனால், இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam

இதைக்கேட்ட சாமுண்டீஸ்வரி, இந்த விஷயம் என் காதுக்கும் வந்துச்சு, நான் விசாரித்து பார்த்தேன், ஊர்ல புருஷன் உயிரோட இல்லனா ஒரு பெண்ணை இப்படித்தான் தப்பா சொல்லுவாங்க, உனக்கு எங்க குடும்பத்து மேல அக்கறை இருக்கு தான், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் மகேஷ் தான் மாப்பிள்ளை, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதை இப்படியே விட்டுடு என்று சொல்ல, ஜன்னல் பக்கமாக இதைப்பார்த்த ரேவதி நிம்மதியடைய கார்த்திக் ஏமாற்றம் அடைகிறான். ரேவதியின் வாழ்க்கையை காப்பாற்ற அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X