ரேவதி கழுத்தில் தாலி கட்டுவது யார்? காணாமல் போன மாப்பிள்ளை.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: கார்த்திக், சாமுண்டீஸ்வரியை பார்த்து, மகேஷ் நல்லவன் இல்லை, அவனுக்கும் அண்ணி மாயாவிற்கும் தொடர்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மாயா பல முறை கருகலைப்பு செய்து இருக்கிறாள். இதனால், இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்கிறான். இதைக்கேட்ட சாமுண்டீஸ்வரி, இந்த விஷயம் என் காதுக்கும் வந்துச்சு. நான் விசாரித்து பார்த்தேன், ஆனால், அது உண்மை இல்லை. உனக்கு எங்க குடும்பத்து மேல அக்கறை இருக்கு தான், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் மகேஷ் தான் மாப்பிள்ளை, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்கிறாள். இதை ஜன்னல் பக்கமாக இருந்து கேட்ட ரேவதி நிம்மதியடைய கார்த்திக் ஏமாற்றம் அடைகிறான். ரேவதியின் வாழ்க்கையை காப்பாற்ற அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறான்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், ராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரியிடம் என்னாச்சு ரொம்ப நேரமா நீ காணுமே என்று கேட்க, அவள், மகேஷ் தன்னை கடத்திய விஷயத்தை சொல்ல, ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள், அந்த கேடு கெட்டவனையா உன் பொண்ணுக்கு கட்டி வைக்க போற என்று கேட்க சாமுண்டீஸ்வரி இல்ல டிரைவர் ராஜா தான். என் பொண்ணு கழுத்தில் தாலி கட்ட போறது அவன் தான் என் வீட்டு மாப்பிள்ளை என்று சொல்கிறாள். மறுபக்கம், பரமேஸ்வரி, நான் போய் சாமுண்டீஸ்வரியிடம் பேசுறேன், அவளை சம்மதிக்க வைக்கிறேன் என்று கிளம்பி வருகிறாள். ரேவதிக்கு என் பேரனை கட்டி வைக்க சம்மதம் சொல்லு என்று பேச, சாமுண்டீஸ்வரி கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். மேலும், நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறாள், இதனால், பரமேஸ்வரி பாட்டியும் ஏமாற்றத்துடன் திரும்புகிறாள்.

டிரைவர் ராஜாதான் மாப்பிள்ளை: அதனை தொடர்ந்து ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் வந்து, மாப்பிள்ளை மகேஷ் நல்லவன் இல்ல, அவனை பத்தி எல்லாரும் தப்பா பேசுகிறார்கள். அப்படிப்பட்டவனையா நம்ப பொண்ணுக்கு கட்டி வைக்க போற? என்று கேட்க, சாமுண்டீஸ்வரி அவன் கேடு கெட்டவன் என்பது எனக்கும் தெரியும், அவனுக்கும் அந்த மாயாவிற்கும் தொடர்பு இருக்கு என்பதும் எனக்கு தெரியும் என்று சொல்கிறாள். அப்படி தெரிந்தே நம்ம பொண்ணு வாழ்க்கையை நான் கெடுப்பேனா? கண்டிப்பா அவன் கூட இந்த கல்யாணம் நடக்காது, ஆனால், சொன்ன நேரத்தில் நான் பார்த்த மாப்பிள்ளைக்கூட கல்யாணம் நடக்கும். அந்த மாப்பிள்ளை வேற யாரும் இல்லை டிரைவர் ராஜாவை தான். நான் நம்ப வீட்டு மாப்பிள்ளையாக்க போறேன். அதையும் நானே முடிவு செய்து விட்டேன் என்று சொல்ல ராஜராஜன் நாம நினைத்த மாதிரியே எல்லாம் நடக்குது என சந்தோசப்படுகிறாள்.

காணாமல் போன மகேஷ்: மேலும், நல்ல முடிவைத்தான் எடுத்து இருக்க சாமுண்டீஸ்வரி, ராஜா நல்லவன் நம்ப குடும்பத்து மேல அக்கறை கொண்டவன், இப்படிப்பட்ட ஒருவனுக்கு ரேவதியை கல்யாணம் செய்து வைத்த நிச்சயம் அவள் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்கிறான். அதே நேரம், அய்யர் மாப்பிள்ளையை அழைத்து வர சொல்ல, மாயா அவனை அழைத்து வர போக, அங்கே மகேஷ் இல்லாததைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











