குடும்பத்தில் வெடித்த பூகம்பம்.. சுக்குநூறாக உடைந்த மீனாட்சி இதயம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!

சென்னை:. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், கோவிலில் ரியாவை திருமணம் செய்து கொண்ட ஆனந்த், நாம வீட்டுக்கு போய் கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்லி ரியாவை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருகிறான். அவளை காரிலேயே உட்கார வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த ஆனந்த்தை பார்த்த மீனாட்சி, ஆசையோடு ஓடிவந்து, உங்களுக்காகத்தான் எல்லா டெக்கரேஷனும் பண்ணி இருக்கேன் என்று சந்தோஷமாக வரவேற்கிறாள்

இதையடுத்து, திருமண நாளை கொண்டாடுவதற்காக குடும்பமே கேக் கட் பண்ண ரெடியாக இருக்கும் போது, கேக்கை வெட்டாமல், வெளியே காரில் இருக்கும் ரியாவை வீட்டுக்குள் அழைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 22nd Episode

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், மாலையும் கழுத்துமாக வந்த ரியாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நானும் ரியாவும் நீண்ட நாளாக காதலித்துக்கொண்டு இருந்தோம். இப்போது,. கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்று உண்மையை உடைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவர்களை பார்த்து உச்சகட்ட டென்ஷனான அபிராமி, ஆனந்தை பிடித்து உன்னையே நம்பி இருக்கும் இவளுக்கு எப்படி துரோகம் பண்ண என பளார் பளார் என அடிக்கிறாள்.

ஆனந்த் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே மீனாட்சியை சுத்தமா பிடிக்கல நீங்கதான் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சீங்க. காலேஜ் படிக்கும் போதிலிருந்தே நானும் ரியாவும் காதலிச்சோம். நீங்க கட்டாய படுத்தவே தான் அந்த குழந்தையும் பெத்துக்கிட்டோம். இந்த விஷயத்துல என்ன கேள்வி கேட்க உங்க யாருக்கும் தகுதியும் கிடையாது உரிமையும் கிடையாது மீனாட்சி தான் பேசணும் அவ பேசட்டும் நான் அவகிட்ட பேசிக்கிறேன் என ஆனந்த் பதிலடி தருகிறான்.

இதையெல்லாம் கேட்ட மீனாட்சி அப்படியே உடைந்து போய் படிக்கட்டில் உட்கார ஆனந்த் அவளிடம் பேச போக கோபத்தில் கொந்தளிக்கும் மீனாட்சி ஒரு கட்டத்தில் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி ஆனந்த் முகத்தில் வீசி எறிகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X