கதறி அழும் மீனாட்சி.. ஆனந்தை கைது செய்ய வந்த போலீஸ்‌.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், மாலையும் கழுத்துமாக வந்த ரியாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நானும் ரியாவும் நீண்ட நாளாக காதலித்துக்கொண்டு இருந்தோம். இப்போது, கல்யாணம் பண்ணிக்கொண்டோம் என்று உண்மையை உடைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

நானும் ரியாவும் காதலிச்சோம். நீங்க கட்டாயப்படுத்தவே தான் அந்த குழந்தையும் பெத்துக்கிட்டோம். இந்த விஷயத்துல என்ன கேள்வி கேட்க உங்க யாருக்கும் தகுதியும் கிடையாது உரிமையும் கிடையாது மீனாட்சி தான் பேசணும் அவ பேசட்டும் நான் அவகிட்ட பேசிக்கிறேன் என்கிறான் ஆனந்த். இதையெல்லாம் கேட்ட மீனாட்சி அப்படியே உடைந்து போய் படிக்கட்டில் உட்கார ஆனந்த் அவளிடம் பேச போக கோபத்தில் கொந்தளிக்கும் மீனாட்சி ஒரு கட்டத்தில் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி ஆனந்த் முகத்தில் வீசி எறிகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial March 23rd Episode

இன்றைய எபிசோட்: ஆனந்தால் உடைந்து போன மீனாட்சி இனிமே உன் கூட வாழ்றதுல எந்த அர்த்தமும் இல்லை விரக்தியில் வீட்டை விட்டு வெளியேற தீபா அவளை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள். இந்த நேரத்தில் நீங்க வீட்டை விட்டு வெளியே போனா அது சரியா இருக்காது. உங்க வீட்டுக்கு போனாலும் அவங்க விஷயம் தெரிஞ்சு ரொம்ப வருத்தப்படுவாங்க, நீங்க இந்த வீட்டுக்கு கூட வர வேண்டாம் என அவுட் அவுஸ் அழைத்துச் செல்கிறாள்.

கதறி அழும் மீனாட்சி: மீனாட்சி ஜானகியை பிடித்து கதறி அழுதுக்கொண்டு இருக்க, தீபா கீழே கிடக்கும் தாலியை எடுத்து பூஜை செய்து மீனாட்சி அக்கா வாழ்க்கைல எந்த பிரச்சினையும் வரக்கூடாது அவங்க பழையபடி ஒன்று சேர்ந்து வாழணும் என பிராத்தனை செய்கிறாள். அபிராமி, ஆனந்த் செய்ததை நினைத்து வருத்தத்தில் இருக்க அண்ணாமலை அபிராமியை தேற்ற முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் இது என்ன புது ட்விஸ்ட், இத நமக்கு சாதகமா மாற்றிக்கணும் என பிளான் போடுகின்றனர்.

கைது செய்ய வந்த போலீஸ்: இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் போலீஸ், இங்க ஆனந்த் யாரு என கேட்கின்றனர். கட்டின பொண்டாட்டி இருக்கும்போது விவாகரத்து கூட வாங்காமல் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வரியா? மீனாட்சி தான் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று கைது செய்ய வந்திருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X